எல்ஐசியில் பாலிசி வைத்துள்ளவர்கள், ஐபிஓவில் பங்குகளை வெளியிட்ட முதல் நாளிலிருந்தே அதிகளவில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.
15 நிமிடத்தில் 5 லட்சம் கோடி இழப்பு.. மும்பை பங்குச்சந்தை சரிவுக்கு 5 காரணம்!!
அதன் மறுபக்கம் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவில் பங்குகளை வாங்க அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே இது ஏன் என விளக்கமாக பார்க்கலாம்.

எல்ஐசி ஐபிஓ
எல்ஐசி நிறுவனம் ஐபிஓ மூலம் 20,557 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. அதில் 50 சதவீதத்தைத் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் வாங்கலாம். 35 சதவீதத்தைச் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கலாம். 15 சதவீதத்தை நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களும் வாங்கலாம்.

சலுகைகள்
ரீடெயில் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கின் விலையான 949 ரூபாயிலிருந்து 45 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. எல்ஐசி பாலிசி வைத்துள்ளவர்களுக்கு 60 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. எனவே குறைந்தது 889 ரூபாய் முதல் 949 ரூபாய் ஒரு பங்கு என வாங்க முடியும்.

எப்போது வரை வாங்க முடியும்?
மே 4-ம் தேதி தொடங்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்குகளை மே 9ம் தேதி வரை வாங்கலாம். மே 12-ம் தேதி பங்குகள் அலாட் செய்யப்படும். மே 13-ம் தேதி ரீஃபண்ட் கிடைக்கும். மே 16-ம் தேதி டிமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். மே 17-ம் தேதி பொது சந்தையில் வெளியிடப்படும்.

ஆர்வம் காட்டிய இருதரப்பினர்
எல்ஐசி ஐபிஓ பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே 7-ம் தேதி, 4.54 மணி வரையில் பாலிசிதாரர்கள், ஊழியர்களை தவிரப் பிற முதலீட்டாளர்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டாதது போலவே உள்ளது.
எல்ஐசி ஐபிஓ தொடங்கிய நாள் முதல் ஆர்வம் காட்டிய எல்ஐசி பாலிசிதாரர்கள் சனிக்கிழமை மாலை வரை 4.45 மடங்கு பங்குகளை வாங்கியுள்ளனர். ஊழியர்கள் 3,46 மடங்கு முதலீடுகளைக் குவித்துள்ளார்கள். சில்லறை முதலீட்டாளர்கள் 1.39 மடங்கு அதிக பங்குகளை வாங்கி குவித்துள்ளார்கள். நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் 1.04 மடங்கும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 0.67 சதவீதமும் முதலீடு செய்துள்ளார்கள்.

அமெச்சூர் முதலீட்டாளர்கள்
இவற்றை வைத்து பார்க்கும் போது எல்ஐசியில் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என எண்ணிய, ரிஸ்க் எடுக்க விரும்பாத அமெச்சூர் முதலீட்டாளர்கள் அதிகமாக ஐபிஓவில் முதலீடு செய்துள்ளது போல தெரிகிறது. ஆனால் அனுபவம் உள்ள முதலீட்டாளர்கள் நிதானமாகக் கவனித்து முதலீடுகளைச் செய்துள்ளனர்.

ரெப்போ வட்டி விகிதம்
இந்தியா மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதத்தைக் குறைத்ததால், சந்தை நிலையாக இல்லை. பங்குச்சந்தை குறியீடுகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சந்தை சரிய அதிக வாய்ப்புள்ளது. அனுபவம் உள்ள முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவில் ஆர்வம் காட்டாததற்கு இது ஒரு காரணம்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், எல்ஐசி பங்குகள் சந்தைக்கு வரும் முன்பு போர் உக்கிரம் பெற்றால் பங்குகளின் விலை பெரும் அளவில் சரியும். எனவே சந்தைக்கு வரும் வரை காத்திருந்து முதலீடு செய்யலாம் என அனுபவம் உள்ள முதலீட்டாளர்கள் நினைக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.