3 நிறுவனத்தில் ரூ.11,000 கோடி.. சிக்கித்தவிக்கும் எல்ஐசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பல குடும்பங்களைப் பெரிய இழப்பில் இருந்து காப்பாற்றிய கதை பலருக்கும் தெரியும். ஆனால் தற்போது இந்நிறுவனத்தின் வராக்கடன் பிரச்சனை நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. தொடர்ந்து வங்கிகள் வராக்கடன் பிரச்சனை உடன் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது எல்ஐசி நிறுவனமும் இதில் சிக்கியுள்ளது.

 

முதலீட்டுக்கு நம்பிக்கையாக இருக்கும் எல்ஐசி நிறுவனத்தில் தற்போது 30000 கோடி ரூபாய் அளவிலான வராக்கடன் வைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஏர்டெல்லுக்கு உயிர் கொடுத்த ஆப்பிரிக்கா.. எப்படி தெரியுமா..!

 மொத்த வராக்கடன்

மொத்த வராக்கடன்

எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி செப்டம்பர் 30. 2019 வரையிலான காலத்தின் நிலவரப்படி இந்நிறுவனத்தின் மொத்தம் வராக்கடன் சுமார் 30,000 கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிலையில் தற்போது எல்ஐசி நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் தனது மொத்த சொத்து மதிப்பில் 6.10% உள்ளதாகவும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டதட்ட இது இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் எல்ஐசி எப்போதும் நிலையான மொத்த வாராக்கடன் விகிதம் 1.5 - 2% தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 நிறுவனங்கள்

3 நிறுவனங்கள்

இந்த 30,000 கோடி ரூபாய் வராக்கடனில் 11,000 கோடி ரூபாய் வெறும் 3 நிறுவனங்கள் மூலம் ஏற்பட்டு உள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. 2020ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத வர்த்தகத்தைக் கணக்கிடுகையில் DHFL, ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டும் சுமார் 11,000 கோடி ரூபாய் வராக்கடனுக்குக் காரணமாக இருக்கிறது.

6,500 கோடி ரூபாய்
 

6,500 கோடி ரூபாய்

எல்ஐசி நிறுவனம், DHFL நிறுவனத்திற்குக் கொடுத்த 6,500 கோடி ரூபாய் முதலீடும், கடனும் ஜூன் மாதத்தில் வரக்கடனாக மாறியது. DHFL நிறுவனத்தில் எல்ஐசி லைப் இன்சூரன்ஸ், பென்ஷன் பண்ட்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தது.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தில் செய்த 4000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடும் கடனும் செப்டம்பர் 2019இல் வராக்கடனாக மாறியது.

வராக்கடன் நிறுவனங்கள்

வராக்கடன் நிறுவனங்கள்

எல்ஐசி பல நிறுவனத்தில் முதலீடும், கடனும் கொடுத்துள்ள நிலையில் அவை தற்போது வராக்கடனாக மாற்றியுள்ளது. அப்படி 30000 கோடி ரூபாய் வராக்கடனாக மாற்றிய நிறுவனங்களின் பட்டியல் இதோ. ஆர்சிட் பார்மா, ரெயின்போ பேப்பர்ஸ், ஜோதி ஸ்டக்ச்சர்ஸ், மந்தான இண்டஸ்ட்ரீஸ், டெக்கான் குரோனிக்கள், எஸ்ஸார் போர்ட், காமன், ஐ எல் & எஃப் எஸ், பூஷண் பவர், வீடியோகான் இஸ்டஸ்ட்ரீஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஆம்ற்றாக் ஆட்டோ, ஏபிஜி ஷிப்யார்ட், யூனிடெக், ஜிவிகே பவர், ஜிடிஎல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் அடங்கும்.

எல்ஐசி

எல்ஐசி

எல்ஐசி நிறுவனம் தற்போது 4 லட்சம் கோடி ரூபாயை தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளது. சொத்து மேலாண்மை பிரிவில் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் மாபெரும் நிறுவனம்.

இதில் தற்போது 30,000 கோடி ரூபாய் தொகை வராக்கடன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC’s Rs 11,000-crore NPA on DHFL, Reliance

Life Insurance Corp, India’s biggest buyer of debt, has seen Rs 11,000 crore of bonds slide into defaults in the first half of FY20, with rating companies downgrading to junk the papers of DHFL, Reliance Capital, Reliance Home Finance, and Sintex Industries. LIC made provisions for its investments of Rs 6,500 crore in DHFL across life and pension funds.
Story first published: Tuesday, January 28, 2020, 16:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X