லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC), இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ வெளியீட்டை வெற்றிகரமான முடித்த நிலையில், பங்குச்சந்தையில் வெளியிடுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.
திங்கட்கிழமை முடிந்த ஐபிஓ முதலீட்டில் 3 மடங்கு முதலீட்டைப் பெற்ற நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் எந்த விலையில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஐஆர்சிடிசி-யை தொடர்ந்து அரசு நிறுவனப் பங்குகள் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் ஐஆர்சிடிசி போல் லாபம் அளிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி தான்..
சூப்பர் சரிவில் தங்கம் விலை.. யாருக்கெல்லாம் பலன்.. இன்னும் குறையுமா?

எல்ஐசி ஐபிஓ
மே 4 முதல் மே 9 வரை நடந்த எல்ஐசி ஐபிஓ-வில் மத்திய அரசு ரூ.902 முதல் ரூ.949 விலையில் தனது 16.2 கோடி பங்குகளை வெளியிட்ட நிலையில், சுமார் 47.83 கோடி பங்குகளுக்கு முதலீடு குவிந்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

ரிலையன்ஸ் பவர்
இந்த வெற்றி மூலம் 2008ஆம் ஆண்டு அனில் அம்பானியிண் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பெற்ற 48 லட்சம் ஐபிஓ முதலீட்டு விண்ணப்பங்கள் என்ற மிகப்பெரிய வரலாற்று சாதனையை முறியடித்து 73 லட்சம் முதலீட்டு விண்ணப்பங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

வெளியீட்டு விலை நிர்ணயம்
இந்நிலையில் எல்ஐசி நிறுவனம் பிஎஸ்ஈ மற்றும் என்எஸ்ஈ பங்குச்சந்தையில் வருகிற செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட்டியலிடப்படும் போது ஐபிஓ-வின் அதிகப்படியான விலையான 949 ரூபாயை வெளியீட்டு விலையாக நிர்ணயம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரீமியம் விலை எப்போது வெளியாகும்..?
மேலும் பட்டியலிடப்படும் போது தான் ப்ரீமியம் விலை தெரிய வரும், முதலீட்டாளர்கள் மத்தியில் எல்ஐசி பங்குகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் வெளியீட்டு விலை 949 ரூபாய் என்று நிர்ணயம் செய்யும் அளவிற்கு முதலீட்டை பெற்றுள்ளது.

பங்குகள், முதலீட்டுத் தொகை, பட்டியல்
எல்ஐசி ஐபிஓ-வில் பங்கு ஒதுக்கீடு பெறாத ஏலதாரர்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை துவங்கும். திங்கட்கிழமை, பங்குகள் தகுதியுள்ள முதலீட்டாளர்களின் கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் மற்றும் எல்ஐசி பங்குகளின் மும்பை பங்குச்சந்தை பட்டியல் செவ்வாய்க்கிழமைக்குள் இருக்கும்.