லைப் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு இறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. எல்ஐசி முக்கியமான அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக் காரணமாக இந்திய மக்கள் தவித்து வரும் நிலையில், பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான எல்ஐசி, இன்சூரன்ஸ் கிளைம் பணத்தைச் செட்டில் செய்வதில் மிக முக்கியமான தளர்வை அறிவித்துள்ளது.

 

நம்ம ஊரு டிவிஎஸ் அறிவித்த ரூ.40 கோடி.. நெகிழ்ச்சியில் இந்திய மக்கள்..!

எல்ஐசி (LIC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் குடும்பத்தார் உயிரிழந்து நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்குத் தாமதமானால் இறப்பை உறுதி செய்யும் பிற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று மூலம் உயிரிழப்பு

கொரோனா தொற்று மூலம் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக் காரணமாகத் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், லைப் இன்சூரன்ஸ் வைத்துள்ள குடும்பத்தார் உரியவரை இழந்த நிலையிலும் கொரோனாவுக்கு மத்தியிலும் இன்சூரன்ஸ் தொகையைக் கிளைம் செய்வதற்கான முயற்சியில் உள்ளனர். இவர்களுக்கு ஏதுவான சூழ்நிலை அமைத்துத் தருவதற்காக எல்ஐசி இந்த முடிவை எடுத்துள்ளது.

மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி

மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி

எல்ஐசி அறிவிப்பின் படி நகராட்சியில் இருந்து இறப்புச் சான்றிதழ் பெற தாமதமாகும் பட்சத்தில், இறந்த நேரம், நாள் ஆகியவை விபரங்கள் அடங்கிய மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி அறிக்கையை வைத்து இன்சூரன்ஸ் கிளைம் பணிகளைத் துவங்க அனுமதி அளித்துள்ளது.

இறந்த நேரம், நாள் மிக முக்கியம்
 

இறந்த நேரம், நாள் மிக முக்கியம்

அரசு மருத்துவமனை, ராணுவ மருத்துவமனை, காப்பரேட் மருத்துவமனை மற்றும் மாநில ஊழியர் இன்சூரன்ஸ் கார்பரேஷன் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் டிஸ்சார்ஜ் சம்மரி அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது எல்ஐசி.

தகனம்/அடக்கம் சான்றிதழ் அவசியம்

தகனம்/அடக்கம் சான்றிதழ் அவசியம்

இதோடு டிஸ்சார்ஜ் சம்மரி அறிக்கையை உறுதி செய்யும் வகையில் எல்ஐசி கிளாஸ் I ஆபீசர் அல்லது 10 வருட அனுபவம் கொண்ட வளர்ச்சி அதிகாரியின் கையெழுத்து மற்றும் தகனம் / அடக்கம் சான்றிதழ் அல்லது இதர அமைப்புகள் கொடுக்கும் காப்பீட்டுதாரரின் இறப்பை உறுதி செய்யும் பிற ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து லைப் இன்சூரன்ஸ்-க்கான தொகையைக் கிளைம் செய்ய அனுமதி அளிக்கிறது.

கொரோனா தொற்றுக்கு மட்டும்

கொரோனா தொற்றுக்கு மட்டும்

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) இந்தச் சலுகையைக் கொரோனா தொற்று மூலம் மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கிறது. இயற்கை மற்றும் பிற வியாதிகள் மூலம் மரணம் அடைந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் நகராட்சி அளிக்கும் இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளது எல்ஐசி.

எல்ஐசி அலுவலக

எல்ஐசி அலுவலக

இதேபோல் ஆயுள் காப்பீடு/ லைப் இன்சூரன்ஸ்-க்கான கிளைம் தொகையைப் பெறுவதற்கு உயிரிழந்தவர்களின் உறவினர் அல்லது துணைவர் அருகில் இருக்கும் எல்ஐசி அலுவலகத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும் எனவும் இதற்கான தளர்வுகளையும் எல்ஐசி மக்களுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி அலுவலக நேரம்

எல்ஐசி அலுவலக நேரம்

மேலும் அரசு ஆணைப்படி மே 10ஆம் தேதி முதல் எல்ஐசி அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே இயங்கும், அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Won’t Seek Municipal Certificates for Hospital Deaths; relaxes claim settlement document requirements

LIC Won’t Seek Municipal Certificates for Hospital Deaths; relaxes claim settlement document requirements
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X