மதுபான விற்பனை தடையால் ரூ. 24, 500 கோடி நஷ்டம்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால் மதுபான விற்பனை முற்றிலும் முடங்கி மாநில அரசுகளின் வருவாய் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு லாக்டவுக்குன் பின் எடுக்கப்படும் முக்கியமான வர்த்தக முடிவுகளில் மதுபான விற்பனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

Liquor ban costs states Rs 24,460 crore
 

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..? யாருக்கு நஷ்டம்..?

மாநில அரசுகள்

மாநில அரசுகள்

மதுபான விற்பனை ஒழிக்க வேண்டும் என ஒரு மக்கள் கூட்டம் போராடி வரும் அதே வேளையில் மாநில அரசுகளின் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுக்கவும் இந்த மதுபான விற்பனை தான் வருமானத்தை ஈட்டி தருகிறது.

இதன் காரணமாகவே மாநில அரசுகள் மதுபான விற்பனையைக் கைவிடாமல் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.

36 நாட்கள்

36 நாட்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பிற்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 36 நாட்களில் மாநில அரசுகள் மதுபான விற்பனை தடையினால் மட்டும் சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை இழந்துள்ளது. இது மாநில அரசுக்குக் கடுமையான வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2019இல் மத்திய அரசு மதுபான விற்பனையில் விதிக்கப்படும் கலால் வரியின் மூலம் சுமார் 2.48 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மே 3 வரையிலான லாக்டவுன் காலத்தில் சுமார் 27,178 கோடி ரூபாய் அளவிலான வருவாய் இழப்பை மாநில அரசு சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய வருவாய்
 

முக்கிய வருவாய்

ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயில் 15 முதல் 20 சதவீத வருவாய் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டில் பஞ்சாப் மாநிலம் மதுபான விற்பனையின் வாயிலாக 6000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்தது.

தற்போது லாக்டவுன் பாதிப்பால் இந்த இலக்கை அடைய முடியாது எனத் தெரிகிறது.

உணவு பாதுகாப்பு 2006

உணவு பாதுகாப்பு 2006

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உணவு இருப்பதைப் போல், 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் மதுபானமும் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு இருக்கும் காரணத்தால் மதுபானம் விற்பனை செய்யப்படவில்லை, இதனால் நாட்டின் பல பகுதிகளில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இது காவல்துறைக்குக் கூடுதல் சுமையாக உள்ளது என Indian Spirits & Wine Association of India (ISWAI) அமைப்பின் தலைவர் அம்ரித் கிரண் சிங் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்திற்குச் சில வாரங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு, மதுபான விற்பனைக்கு அனுமதி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Liquor ban costs states Rs 24,460 crore

In the last 36 days of the nationwide lockdown, the states collectively have lost an estimated revenue of an over Rs 24,000 crore due to no liquor sale. Given that the shutdown is certain till May 3, they will lose an estimated total of Rs 27,178 crore. The states earn through the state excise duties and also have a virtual monopoly on VAT.
Story first published: Thursday, April 30, 2020, 7:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X