இந்தியாவில் 76% வர்த்தக செயல்பாடுகள் முடங்கியது.. கேள்விக்குறியாக நிற்கும் பொருளாதார வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாண்டவம் மிகவும் மோசமாக இருக்கும் சூழ்நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் விதமான மத்திய மாநில அரசுகள் அதிகளவிலான மற்றும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

 

இதன் வாயிலாக இந்தியாவின் வர்த்தகம் கொரோனாவிற்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் 2வது கொரோனா தொற்றுக் காலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்குச் சுமார் 76 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜப்பான் நாட்டின் முன்னணி தரகு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது.

 இந்திய பொருளாதார

இந்திய பொருளாதார

இந்திய பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் தட்டுத்தடுமாறி 2020 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், 2வது கொரோனா அலை பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் உள்ளது.

 இந்தியா பிஸ்னஸ் குறியீடு - 75.9 சதவீத சரிவு

இந்தியா பிஸ்னஸ் குறியீடு - 75.9 சதவீத சரிவு

இந்தச் சூழ்நிலையில் நோமுரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 25 உடன் முடிந்த வாரத்தில் நோமுரா இந்தியா பிஸ்னஸ் ரெசம்பஷன் இன்டெக்ஸ் குறியீடு அதிகப்படியாக ஒரே வாரத்தில் 8.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் மொத்த வர்த்தகப் பாதிப்பின் அளவு என்பது 75.9 சதவீதம் அளவீட்டை அடைந்துள்ளது என நோமுரா தெரிவித்துள்ளது.

 மியூடெட் பொருளாதார வளர்ச்சி
 

மியூடெட் பொருளாதார வளர்ச்சி

தற்போது ஏற்பட்டு உள்ள பாதிப்பு மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி கணிப்புகள் அனைத்தும் மியூடெட் அதாவது கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட வளர்ச்சி அனைத்தும் மாயமாகி மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது நோமுரா.

 லாக்டவுன் அறிவிப்பின் எதிரொலி

லாக்டவுன் அறிவிப்பின் எதிரொலி

இந்திய வர்த்தகச் சந்தையில் தற்போது ஏற்பட்டு உள்ள வர்த்தகப் பாதிப்பு என்பது லாக்டவுன் அறிவிப்புகள் வாயிலாகவே ஏற்பட்டு இருந்தாலும், இதன் எதிரொலி பொருளாதார வளர்ச்சியில் மட்டும் அல்லாமல் மின்சாரப் பயன்பாடு, எரிபொருள் பயன்பாடு, சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் ஜிஎஸ்டி EWay பில், ரயில் சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் வருமானம் பெரிய அளவில் பாதிக்கும்.

 2020 மார்ச் லாக்டவுன்

2020 மார்ச் லாக்டவுன்

2020 மார்ச் லாக்டவுன் மூலம் ஏற்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதாரப் பாதிப்பை ஒப்பிடுகையில் தற்போது ஏற்பட்டு உள்ள பாதிப்பு என்பது சற்றுக் குறைவு தான், குறிப்பாக வேலைவாய்ப்பு அளவீடு பெரிய அளவிலான பாதிப்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில் இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

 ஜூன் காலாண்டு வளர்ச்சி

ஜூன் காலாண்டு வளர்ச்சி

மேலும் இந்தியாவின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது உற்பத்தி, விவசாயம் மற்றும் Work From Home ஆகிய பணிகள் தொடரும் காரணத்தால் 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி அளவீட்டைத் தொடர்ந்து 11.5 சதவீதமாக வைத்துள்ளது நோமுரா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lockdowns pull down business activity to 76% of the pre-pandemic level

Covid India latest update.. Lockdowns pull down business activity to 76% of the pre-pandemic level
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X