சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.. பட்ஜெட் ஏமாற்றத்தை தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்வு.. மக்கள் சோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையில் 1 கோடி இந்திய குடும்பங்களுக்குப் புதிதாக எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட சில நாட்களில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது.

 

வியாழக்கிழமை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சமையலுக்குப் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டரின் விலை இந்தியாவின் பெரு நகரங்களில் 25 ரூபாய் வரையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட புதிய விலை உயர்வு அறிவிப்பின் படி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் 719 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 745.50 ரூபாய்க்கும், மும்பையில் 719 ரூபாய்க்கும், சென்னையில் 735 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காரணத்தால் ஜனவரி மாதத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால் டிசம்பர் மாதம் 2 முறை அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் மூலம் எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் 100 ரூபாய் வரையில் அதிகரித்து.

விலை நிர்ணயம்
 

விலை நிர்ணயம்

இந்தியாவில் எல்பிஐி சிலிண்டரின் விலை பெரும்பாலும் சர்வதேசச் சந்தையில் நிலவும் எல்பிஜி விலை, அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இதே காரணியை மயமாக வைத்துத் தான் தினசரி விலை மாற்றம் அடைந்து வருகிறது.

சாமானிய மக்கள்

சாமானிய மக்கள்

கடந்த சில வருடங்களில் சாமானிய மக்கள் தினசரி வாழ்க்கையில் முக்கியப் பயன்பாடு பொருளாக இருக்கும் சமையல் சிலிண்டரின் விலையைத் தொடர்ந்து உயர்த்தும் போதும் பெருமளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ஜனவரி மாதம் எல்பிஐ சிலிண்டர் விலையை உயர்த்த விலை என்றாலும் டிசம்பர் மாதம் மற்றும் பிப்ரவரி மாதத்தின் முதல் 5 நாட்களில் சுமார் 125 ரூபாய் அளவிலான விலையை உயர்த்தியுள்ளது.

தொடர் விலை உயர்வு

தொடர் விலை உயர்வு

சமையல் எரிவாயுவின் தொடர்ந்து விலை உயர்வு ஏற்கனவே வருமானம் பாதிப்பு, வேலைவாய்ப்பு இழப்பில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மிடில் கிளாஸ் மற்றும் லோவர் மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாகவே இருக்கும். இவை அனைத்திற்கும் தாண்டி பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எவ்விதமான சாதகமான அறிவிப்பும் அளிக்கப்படாத நிலையில் இந்த விலை உயர்வு பெரும் பாதிப்பை அளிக்கிறது.

உஜ்வால் திட்டம்

உஜ்வால் திட்டம்

குறிப்பாக மத்திய அரசின் உஜ்வால் திட்டத்தால் சிலிண்டர் இணைப்புக் கொடுக்கப்பட்டாலும் அவர்களால் தொடர்ந்து சிலிண்டரை வாங்க முடியுமா என்ற கேள்வி இந்தத் தொடர் விலை உயர்வின் மூலம் எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்திய மக்கள் இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக வெளியேற முடியாமல் தவித்து வருவது அரசின் தரவுகள் தெளிவாகக் கூறும் நிலையிலும், சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் அடிப்படையாகப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது மத்திய அரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LPG cylinder price increased by Rs 25 from today worries citizens, Latest rates in top cities here

LPG cylinder price increased by Rs 25 from today worries citizens, Latest rates in top cities here
Story first published: Friday, February 5, 2021, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X