லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கிக்கான இணைப்புக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், நிர்ணயம் செய்யப்பட்ட நவம்பர் 27ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் அனைத்தும் DBS வங்கி கிளையாக இயங்க துவங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இதே நாளில் ரிசர்வ் வங்கி கோரிக்கை மூலம் லட்சுமி விலாஸ் வங்கி மீது அறிவிக்கப்பட்ட ஒரு மாத மோராடோரியம் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது.
வங்கி இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் எதிரொலியாக லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளை வர்த்தகம் செய்ய நவம்பர் 26ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது தேசிய பங்குச்சந்தை
{photo-feature}