உலக நாடுகள் 2022ஆம் ஆண்டில் எப்படி வேகமாகப் பரவி வரும் கொரோனா, ஒமிக்ரான்-ஐ கட்டுப்படுத்துவது எனத் திண்டாடிக்கொண்டு இருக்கும் போது சீனா மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் தனது வளர்ச்சிப் பாதையை நோக்கிய இன்னும் வேகமாக ஓட துவங்கியுள்ளது.
TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..!
சீனா ஏற்கனவே உற்பத்தியில் கலக்கும் நிலையில் தற்போது மறுசீரமைப்புச் செய்யப்பட்ட புதிய மற்றும் நவீன மேடு இன் சீனா 2025 தொழிற்துறை கொள்கையில் ப்ளூபிரின்ட்-ஐ ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு வெளியிட்டு உள்ளது.

சீனா
உலகின் 2வது வல்லரசு நாடாக விளங்கும் சீனா உடன் போட்டி போட முடியாமல் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் தவித்து வரும் நிலையில் சீனா புதிய தொழிற்துறை கொள்கையை வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மேடு இன் சீனா 2025
தற்போது சீன அரசு வெளியிட்டுள்ள மறுசீரமைப்புச் செய்யப்பட்ட மேடு இன் சீனா 2025 தொழிற்துறை கொள்கையில் அடுத்த 5 ஆண்டுக்கான ஸ்மார்ட் உற்பத்தி வளர்ச்சி திட்டத்தை முன்னிறுத்திக் கொள்கையை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் உற்பத்தி கொள்கை
இத்திட்டம் சீனாவின் 70 சதவீத பெரு நிறுவனங்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்புதிய ஸ்மார்ட் உற்பத்தி கொள்கையின் கீழ் 70 சதவீத உற்பத்தி நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தொழிற்துறை ரோபோட்
அதாவது சீனா சொந்தமாகத் தொழிற்துறை ரோபோட்களையும், உற்பத்தி துறைக்கான அதிநவீன உபகரணங்கள் மற்றும் திட்ட வடிவத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் உற்பத்தி கட்டமைப்பு மூலம் அடுத்த சில வருடத்திலேயே சீனா தனது உற்பத்தியைப் பல மடங்கு உயர்த்த முடியும் என நம்புகிறது, இதனால் சந்தையில் இன்னும் குறைவான விலையில் பொருட்களைக் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்த முடியும் என்பது சீன அரசின் திட்டமாக உள்ளது.

தொழிற்சாலை
கடந்த 5 ஆண்டு உற்பத்தி திட்டத்தின் மூலம் நாட்டின் தொழிற்சாலைகளைப் பெரிய அளவில் நிர்வாகம் செய்து ஏற்றுமதி மற்றும் உற்பத்தி இலக்கை அடைந்துள்ளது. இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல தற்போது புதிய 5 ஆண்டுத் திட்டம் கொண்டு வர உள்ளது.

2 மடங்கு அதிகரிப்பு
சீனாவில் தற்போது தொழிற்துறை ரோபோ துறையின் வருமானம் அடுத்த 3 வருடத்திற்குச் சராசரியாக 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்பத்தியும் 2 மடங்கு அதிகரிக்கும்.

தொழில்நுட்ப பகிர்வு
மேலும் மேடு இன் சீனா 2025 தொழிற்துறை கொள்கையில் 70 சதவீத பெரு நிறுவனங்களை டார்கெட் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தையும் உற்பத்தித் திறனையும் பெரும்.

மேடு இன் சீனா திட்டம்
இதேவேளையில் சீனாவில் பயன்பாட்டில் இருக்கும் தொழிற்துறை ரோபோக்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நவீன மேடு இன் சீனா திட்டம் தொழிற்சாலைக்கு மட்டும் அல்ல கிடங்கு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஏற்றுமதி என அனைத்து துறைகளிலும் இருக்கும்.

எலக்ட்ரிக் கார், பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ்
தற்போது சீனாவின் முக்கிய இலக்காக இருப்பது எலக்ட்ரிக் கார், பேட்டரி, மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தான். இந்நிலையில் முதல்கட்டமாக இந்த 3 பிரிவில் தான் நவீன உற்பத்தி தளங்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்தப் புதிய 5 ஆண்டு திட்டத்தை நீங்க எப்படிப் பாக்குறீங்க...