டெஸ்லா 'மேடு இன் சைனா'.. யார் யாருக்கு எத்தனை வேணும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் இந்தியா இதற்கான முயற்சியை மிகவும் தாமதமாக எடுத்துள்ளது என்றால் மிகையில்லை. காற்று மாசுபாடு, கச்சா எண்ணெய் பிரச்சனை என அனைத்தையும் சரி செய்ய மின்சார வாகனங்கள் பெரிய அளவில் உதவும். இன்னும் 10 முதல் 15 வருடத்தில் இந்தியாவிலும் மின்சாரக் கார்கள் தான் ஆதிக்கம் செய்யும் என்றால் மிகையில்லை.

இந்நிலையில் டெஸ்லா, தனது புதிய சீன தொழிற்சாலையில் தயாரான கார்களை ஜனவரி முதல் இந்தியா உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் விற்பனை செய்ய உள்ளது.

ஐயோ போச்சே..! 5 லட்சத்தில் நாமும் கோடீஸ்வரர்..! அம்பானி கொடுத்த அந்த வாய்ப்பு..!

இந்தியாவிற்கு இழப்பு
 

இந்தியாவிற்கு இழப்பு

உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டெஸ்லா, அமெரிக்காவைத் தாண்டி வெளிநாட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்த போது இந்தியாவை டீலில் விட்டுவிட்டுச் சட்டென்று சீனாவைத் தேர்வு செய்தது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு.

விற்பனைக்கு வரும் டெஸ்லா

விற்பனைக்கு வரும் டெஸ்லா

டெஸ்லாவை இந்தியாவிற்கு எப்படியாவது இழுக்க வேண்டும் என இந்தியாவில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் டெஸ்லா செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் சீனாவில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட டெஸ்லாவின் மாடல் 3 கார்கள் விற்பனைக்கு வர உள்ளது.

தயாரிப்பு அளவு

தயாரிப்பு அளவு

அமெரிக்கத் தொழிற்சாலையை வைத்து உலகளவிலான தனது வர்த்தகத்தைப் பூர்த்திச் செய்ய முடியாது என முடிவு செய்த டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் பல குழப்பங்களுக்கு மத்தியில் தனது புதிய தொழிற்சாலைக்கான இடமாகச் சீனாவைத் தேர்வு செய்தார்.

எலான் மஸ்க் முடிவு செய்த ஒரு சில மாதங்களில் தயாரிப்புப் பணிகள் துவங்கிவிட்டது.

ஜனவரி 25
 

ஜனவரி 25

இந்நிலையில் சீன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட டெஸ்லாவின் மாடல் 3 ரகக் கார்கள் வாடிக்கையாளர் விற்பனைக்கு 2020 ஜனவரி 25ஆம் தேதி கொண்டு வர முடிவு அனைத்து பணிகளையும் செய்து வருவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலகளவில் மின்சார வாகன தயாரிப்பில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் ஒரு முன்னோடி. மக்கள் மற்றும் உலகின் தேவையைப் பல வருடங்களுக்கு முன்பே யோசித்த டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் அதிவேக மற்றும் அதிநவீன மின்சாரக் கார்களைத் தயாரிக்கத் துவங்கினார்.

மார்ட்ன் ஐன்ஸ்டீன்

மார்ட்ன் ஐன்ஸ்டீன்

மார்ட்ன் உலகின் ஐன்ஸ்டீன் எனப் போற்றப்படும் அளவிற்கு எலன் மஸ்க் ஒரு திறமைசாலி. பல துறையில் இவர் பல சாதனைகளைச் செய்துள்ளார், குறிப்பாக இண்டர்நெட் மேப்ஸ், இண்டர்நேஷனல் பேமென்ட், ராக்கெட் தயாரிப்பு, வின்வெளி ஆராய்ச்சி, சோலார் எனர்ஜி துறை, கார் தயாரிப்பு, ஹைப்பர்லூப் எனப்படும் சூப்பர்பாஸ்ட் டிராவல் எனப் பல துறையில் இவருடைய சாதனைகளைப் பேச ஒரு நாள் போதாது.

டெஸ்லா தயாரிப்புகள்

டெஸ்லா தயாரிப்புகள்

இந்நிறுவன தயாரிப்புகள் பற்றி யாருக்கும் சொல்லி தெரிய தேவையில்லை. இன்று சந்தையில் கிடைக்கும் ஆடம்பர கார்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்ட வகையில் டெஸ்லா நிறுவனம் கார்களை உருவாக்கி வருகிறது.

சொல்லப்போனால் மின்சாரக் கார்கள் பிரிவில் ஆடி, பென்ஸ், ஹூன்டாய், சீனாவின் BYD, TATA, மஹிந்திரா போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் டெஸ்லா தான் முன்மாதிரியாக உள்ளது.

Driverless கார்கள்

Driverless கார்கள்

இன்று வரையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போராடி முயற்சி செய்து வரும் Driverless கார்கள் தொழில்நுட்பம் டெஸ்லாவில் உள்ளது. பல நிறுவனங்கள் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் டெஸ்லா இத்தொழில்நுட்பத்தைச் சாலைக்குக் கொண்டு வந்துள்ளது வரலாற்று நிகழ்வு. இது டெஸ்லா கார்களின் ஒரு முக்கிய அம்சம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

made-in-China Tesla's are coming to sale on india in late January

Tesla Inc. said it’s planning to start delivering made-in-China Model 3 cars before late January. The deliveries would come from the first batch of cars that Tesla produces in bulk later this year.
Story first published: Saturday, November 23, 2019, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X