பல லட்சம் கோடி முறைகேடாக பரிமாற்றம்.. லிஸ்டில் பல இந்திய வங்கிகள்.. அதிர வைக்கும் பின்னணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 2 லட்சம் கோடி அமெரிக்கா டாலர் அளவுக்கு முறைகேடான பரிவர்த்தனை நடந்துள்ளதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த முறைகேடான பரிவர்த்தனைகளில், கடந்த 2010 முதல் 2017 வரையான கால கட்டங்களில், இந்திய வங்கிகள் வழியாக பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் கூறுகின்றன.

இதனை அமெரிக்க அரசு பண மோசடி, போதைப் பொருள் டீலிங் பயங்கரவாத நிதி மோசடி போன்ற பணப் பரிமாற்றங்களாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளது.

செம சரிவில் சீன இறக்குமதி! கணக்கு சொன்ன மத்திய அமைச்சர்!

$2 லட்சம் கோடி முறைகேடு

$2 லட்சம் கோடி முறைகேடு

ஃபின்சென் பட்டியலில் உள்ள 2 லட்சம் கோடி அமெரிக்கா டாலர் அளவுக்கு முறைகேடான பரிவர்த்தனைகளும் கடந்த 1999ம் ஆண்டில் இருந்து 2017க்கு இடையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த உலகளாவிய பரிவர்த்தனைகளைக் கண்டறியும் தரவை, சர்வதேச புலனாய்வு பத்திரிக்கை பெற்றுள்ளது. இந்த தரவானது தற்போது பல ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

இந்திய வங்கிகளும் உண்டு

இந்திய வங்கிகளும் உண்டு

இவ்வாறு ஃபின்சென் பட்டியலில் உள்ள பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிகளில், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் பல உள்ளன. இந்த பட்டியலில் டாப் 5 வங்கிகளின் பட்டியலை பார்ப்போம். ரிசீவர் பக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகபட்சமாக 23 பரிவர்த்தனைகளையும், இதன் மூலம் 162.39 மில்லியன் டாலர்களையும் பெற்றுள்ளது.

பணம் பெறுவதில் IOB தான் டாப்
 

பணம் பெறுவதில் IOB தான் டாப்

ரிசீவர் பக்கத்தில் பணம் பெறுவதில் ஐஓபி வங்கி தான் டாப்பில் உள்ளது. இதே அலகாபாத் வங்கி 26 பரிவர்த்தனை மூலம், 144.24 மில்லியன் டாலர்களையும், இதே பேங்க் ஆப் இந்தியா 35 பரிவர்த்தனைகளின் மூலம் 130.76 மில்லியன் டாலர்களையும் பெற்றுள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 29 பரிவர்த்தனை பெற்றுள்ளது. இதன் மூலம் 27.88 மில்லியன் டாலர்களும் பணம் பெறப்பட்டுள்ளது. இதே கனரா வங்கியில் 37 பரிவர்த்தனைகள் மூலம் 3.31 மில்லியன் டாலர் தொகையானது பெறப்பட்டுள்ளதாக பிசினஸ் ஸ்டேண்டர்டு தரவுகள் காட்டுகின்றன.

பணம் அனுப்பிய வங்கிகள் டாப் 5 வங்கிகள்

பணம் அனுப்பிய வங்கிகள் டாப் 5 வங்கிகள்

இதே பணம் அனுப்பிய வங்கிகள் டாப் 5 வங்கிகளில் முதலில் இருப்பது, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி தான். இது அதிகபசட்மான 14 பரிவர்த்தனைகள் மூலமாக 327.99 மில்லியன் அனுப்பியுள்ளதாகவும், இதே டாய்ச் வங்கியில் (இந்திய செயல்பாடு மூலம்) 18 பரிவர்த்தனை மூலம் 53.76 மில்லியன் டாலர் தொகை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

எஸ்பிஐயும் உண்டு

எஸ்பிஐயும் உண்டு

இதே இந்தஸிந்த் வங்கி மூலம் அதிகபட்சமாக 57 பரிவர்த்தனை மூலம் 8.26 மில்லியன் டாலரும், ஸ்டேண்டர்டு சார்டர்டு வங்கி மூலம் 1 பரிவர்த்தனை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம் 8.17 மில்லியன் டாலர் பரிவர்த்தனையும், இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் 29 பரிவர்த்தனைகள் மூலம் 5.79 மில்லியன் டாலர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

மொத்த பரிவர்த்தனை எவ்வளவு?

மொத்த பரிவர்த்தனை எவ்வளவு?

ஆக மொத்தத்தில் இந்தியா தரப்பில் பணம் அனுப்பியது, பெற்றதும் என மொத்த பரிவர்த்தனை 406 என ஃபின்சென் தரவுகள் கூறுகின்றன. இதில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் அடங்கும் என்பது தான் கவலையளிக்கும் விஷயமே. ஃபின்சென் தரவின் படி, இந்திய வங்கிகள் 482,181,226 டாலர்களை, வெளி நாட்டு வங்கிகள் மூலம் பெற்றுள்ளன.

எவ்வளவு தொகை அனுப்பியுள்ளன?

எவ்வளவு தொகை அனுப்பியுள்ளன?

இதே இந்திய வங்கிகள், இந்தியாவில் இருந்து 406,278,962 டாலர்களை அனுப்பியுள்ளன. இத்தகைய பரிவர்த்தனைகள் தான் தற்போது அமெரிக்காவால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் மூலம் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதால், அந்த வங்கிகளும் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக பொருளாகாது. இந்த வங்கிகள் அமெரிக்க அரசிடம் வழங்கிய ஆவணங்கள் மூலமே இந்தக் குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வங்கிகளும் லிஸ்டில் உண்டு

இந்த வங்கிகளும் லிஸ்டில் உண்டு

மேற்கண்ட டாப் 5 வங்கிகள் மட்டும் அல்லாது, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கரூர் வைஷ்யா வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, யெஸ் பேங்க், தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, டாய்ச் வங்கி (இந்திய செயல்பாடு), யூகோ வங்கி, கர்நாடாகா வங்கி, ஆர்பிஎஸ் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் இந்த லிஸ்டில் அடங்கும்.

இந்த லிஸ்டில் உலகின் முன்னணி வங்கியாக கருதப்படும் ஹெச்எஸ்பிசி உள்ளிட்ட பல வங்கிகளும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Major Indian banks name in suspicious transactions list

Sbi, hdfc bank, bank of india, IOB, canara bank and some other Major Indian banks name in suspicious transactions list
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X