பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொருளாதார மேதை, முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் இன்று, டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாரத் பசாவ் (இந்தியாவைக் காப்பாற்றுங்கள்) கூட்டத்தில் பேசினார்.

அப்போது மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் நேரடியாக விமர்சித்துப் பேசி இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி பொய்யான சத்தியங்களைச் செய்து, கடந்த ஆறு ஆண்டுகளாக மக்களை திசை திருப்பிக் கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

சத்தியங்கள்
 

சத்தியங்கள்

1. இந்தியாவை வரும் 2024-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவேன்.

2. இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கிக் காட்டுவேன்.

3. ஒவ்வொரு ஆண்டும் இந்திய இளைஞர்களுக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் காட்டுவேன் என பல சத்தியங்களைச் செய்தார்.

சத்தியம் நிறைவேற்றவில்லை

சத்தியம் நிறைவேற்றவில்லை

இந்த சத்தியங்களை எல்லாம் ஆறு வருடங்களுக்கு முன்பு, பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்காகச் சொன்னது. இவை எல்லாம் செய்ய முடியாத காரியங்கள். இப்போது இதெல்லாம் பொய் சத்தியம் என நிரூபித்துவிட்டார் மோடி. இந்த சத்தியங்களில் எதையும் இவர் செய்யவில்லை என காரசாரமாக குற்றச் சாட்டி இருக்கிறார் மன்மோகன் சிங்.

பங்கெடுப்பு

பங்கெடுப்பு

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முதலைச்சர்களான கமல்நாத், அசோக் கேலத், புபேஷ் பகல் போன்றவர்கள் எல்லாம் பங்கு பெற்றார்கள். பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரேந்தர் சிங் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

காங்கிரஸை வலுப்படுத்துங்கள்
 

காங்கிரஸை வலுப்படுத்துங்கள்

தன் சுருக்கமான பேச்சின் போது, இந்திய நாட்டை சரியான பாதையில், உண்மையாக முன்னேற்றி கொண்டு செல்ல, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் படியும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் படியும் வலியுறுத்திப் பேசி இருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Manmohan singh alleging modi that he made false promise

The former Indian Prime minister Manmohan singh alleged that the Narendra modi and his party made false promise to misled the indian people.
Story first published: Saturday, December 14, 2019, 20:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X