இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, மண் மீதும் பொன் மீது அனைவருக்கும் தீரா காதல் உண்டு.
அந்த வகையில் உலகின் முன்னணி சமுகவலைதளமான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா-வின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட காலமாக முதலீடு செய்து வருகிறார்.
ஹவாய் பகுதியில் இருக்கும் கவாய் தீவில் புதிதாக 110 ஏக்கர் நிலத்தைச் சுமார் 17 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.
பில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்!

மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் தனித்தனியாகப் பிரித்து மெட்டா என்னும் தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்த பின்பு மெட்டவெர்ஸ் தொழில்நுட்பத்தில் பணியாற்றத் துவங்கியுள்ளது, இத்துறைக்கான தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையும் முதலீடு செய்து, மெட்டவெர்ஸ் துறையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

ரியல் எஸ்டேட் தாகம்
இந்தப் பிசியான வேளையிலும் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் ரியல் எஸ்டேட் தாகம் சற்றும் குறையவில்லை. ஹூவாய் பகுதியில் இருக்கும் கவாய் தீவில் 2014ல் 750 ஏக்கர் நிலத்தையும், அதன் பின்பு 53 மில்லியன் டாலருக்கு 600 ஏக்கர் நிலத்தையும் வங்கிய மார்க் தற்போது மீண்டும் இதே பகுதியில் 110 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். ஏற்கனவே மார்க் ஜூக்கர்பெர்க் வாங்கிய 1350 ஏக்கர் நிலத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக இருந்த கடற்கரை மற்றும் கால்நடை பண்ணையும் உள்ளது.

110 ஏக்கர் நிலம்
தற்போது புதிதாக வாங்கப்பட்டு உள்ள 110 ஏக்கர் நிலத்தில் சர்ச்சைக்குரிய நீர்த்தேக்கம் உள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தாங்கள் வாங்கியுள்ள இந்த 1500 ஏக்கர் பகுதியை Ko'olau Ranch எனச் செல்லமாகப் பெயரிட்டு உள்ளனர்.

127 கோடி ரூபாய்
மார்க் தற்போது 17 மில்லியன் டாலர் அதாவது 127 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள 110 ஏக்கர் நிலத்தில் 100 வருடத்திற்குப் பழமையான அணை உள்ளது, 2006ல் இந்த அணை உடைந்து இப்பகுதியில் 7 பேர் உயிரிழந்தனர்.

மார்க் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா சான்
மேலும் அணையைப் பாதுகாக்க இதுவரையில் எவ்விதமான பணிகளும் செய்யப்படாத நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் இந்த அணையைப் பாதுகாக்க அனைத்து விதமானப் பணிகளையும் தாங்கள் செய்வதாக உறுதியளித்து தற்போது 110 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.