ரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக்-ன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் மீது தனது கவனம் செலுத்தி வருகிறார். இவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டை பலரும் விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து இத்துறையில் முதலீடு செய்து வருகிறார்.

600 ஏக்கர் நிலத்தை வெறும் 391 கோடிக்கு வாங்கி அசத்தும் FaceBook Mark | Oneindia Tamil
 

இந்தச் சூழ்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா சான் உடன் சேர்ந்து ஹவாய் தீவுகளில் ஒன்றான Kauai-யின் மேற்கு பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலத்தை மிகவும் சீப்பான விலைக்கு வங்கியுள்ளார்.

 பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் தொடர்ந்து தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர வர்த்தகப் பிரிவைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் விளம்பர வருவாய் ஈட்டுவதற்கு அனைத்து வழிகளையும் ஆய்வு செய்து தீவிரமான பணியாற்றி வரும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிதாக ஒரு முதலீட்டைச் செய்துள்ளார்.

 600 ஏக்கர் நிலம்

600 ஏக்கர் நிலம்

ஏற்கனவே பல ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்துள்ள மார்க் ஜூக்கர்பெர்க் கொரோனா தொற்றின் 2வது அலை உலகில் பல இடங்களில் மோசமாக இருக்கும் காலகட்டத்தில் ஹவாய் தீவுகளில் Kauai என்னும் பகுதியில் புதிதாக 600 ஏக்கர் நிலத்தை வெறும் 53 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

 1300 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் மார்க்
 

1300 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் மார்க்

53 மில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டதட்ட 391 கோடி ரூபாய். கிட்டதட்ட ஒரு ஏக்கர் நிலம் 65 லட்சம் ரூபாய் அளவில் கைப்பற்றித் தனது மொத்த ரியல் எஸ்டேட் முதலீட்டு அளவை 1300 ஏக்கராக உயர்த்தியுள்ளார் பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்.

 பில் கேட்ஸ் ரியல் எஸ்டேட் முதலீடு

பில் கேட்ஸ் ரியல் எஸ்டேட் முதலீடு

பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் போல மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் சில வருடங்களுக்கு முன்பு விவசாயத் துறையில் இறங்க முடிவு செய்தார். இதன் படி கடந்த சில வருடங்களில் சத்தமே இல்லாமல் அமெரிக்காவில் பல பகுதிகளில் இருந்த சுமார் 2,42,000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய விவசாய நில உரிமையாளராக உயர்ந்துள்ளார் பில் கேட்ஸ்.

வெர்ஜின் குரூப் ரிச்சர்ட் பிரான்சன்

வெர்ஜின் குரூப் ரிச்சர்ட் பிரான்சன்

மேலும் வெர்ஜின் குரூப் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உலகின் பல நாடுகளில் மிகப்பெரிய தொகை முதலீடு செய்து ஆடம்பர வீடு, நிலம் எனப் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். இவர்களைப் போலப் பலர் டெக் முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mark Zuckerberg bought 600 acres of land on Kauai in Hawaii: Massive investment on real estate

Mark Zuckerberg bought 600 acres of land on Kauai in Hawaii: Massive investment on real estate
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X