இந்தியாவின் முன்னணி கார் விற்பனையாளரான மாருதி சுசூகி கொரோனாவையும் தாண்டி, கடந்த செப்டம்பரில் பட்டையை கிளப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனையானது 33.4% வளர்ச்சி கண்டு, 1,50,040 வாகனங்களாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 1,12,500 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
நிபுணர்கள் சில மாதங்களுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் கொரோனாவால் முழுக்க சரியவில்லை. மாறாக கொரோனாவிற்கு முன்பே மிக மோசமான நிலையில் இருந்ததாக கூறியிருந்தனர். அதனை உண்மை என்பது போல தான் இந்த அறிக்கை வந்துள்ளது.

வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரம்
ஏனெனில் கொரோனாவிற்கு முன்பு இருந்ததைவிட வாகன விற்பனையாக படு ஜோராக நடந்துள்ளதே இதற்கு சாட்சி. ஆக கொரோனாவில் இருந்தும், பொருளாதார மந்த நிலையில் இருந்தும் பொருளாதாரம் மீண்டு வருவதற்கும் இதுவே சாட்சி. குறிப்பாக உற்பத்தி துறை மீண்டு வருவதற்கான சாட்சி இது.

மினி ரக கார்கள் விற்பனை
மாருதி சுசூகியின் மினி ரக கார்களான ஆல்டோ மற்றும் எஸ் பிரஸ்ஸோ உள்ளிட்ட கார்களின் விற்பனையானது, 35.7 சதவீதம் அதிகரித்து 27,246 வாகனங்களை செப்டம்பரில் விற்பனை அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 20,085 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SUV S-PRESSO விற்பனை படு ஜோரு
இன்றுடன் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு வருடம் ஆகின்றது. இந்த நிலையில் அறிமுகப்பட்ட ஒரு வருடத்திற்குள்ளேயே 75,000 வாகனங்களை விற்று அதிரடி காட்டியுள்ளது மாருதி. இந்த காரின் விலை 4 லட்சம் ரூபாய்க்குள் என்பதால் வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைந்துள்ளது எனலாம். இதனாலேயே அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே பட்டை கிளப்பியுள்ளது.