வென்டிலேட்டர்கள் & மாஸ்க் உற்பத்தியில் களம் இறங்கும் மாருதி சுசூகி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவுக்கு எதிரான போரில் தன் உற்பத்தி ஆலையில், மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க இருப்பதாகச் சொன்னது மாருதி சுசூகி.

 

இப்போது அதிகாரபூர்வமாகவே, மாருதி சுசூகி, AgVa Healthcare என்கிற நிறுவனத்துடன் கை கோர்த்து மருத்துவ உபகரணங்களை தயாரிக்க களம் இறங்கி இருக்கிறதாம்.

கொரோனா வைரஸுக்கு எதிரான மருத்துவ போரில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களை தயாரிக்க இருக்கிறார்களாம்.

கடந்த வாரம்

கடந்த வாரம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா, அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி எப்படி, இந்தியாவின் மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பதில் உதவலாம் எனக் கேட்டு இருந்தாராம்.

10,000 வெண்டிலேட்டர்கள்

10,000 வெண்டிலேட்டர்கள்

தற்போது அதற்கு விடை கொடுக்கும் விதத்தில், AgVa Healthcare நிறுவனத்துடன் மாருதி சுசூகி கை கோர்த்து இருக்கிறது. AgVa Healthcare என்கிற நிறுவனம் வெண்டிலேட்டர்களை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட நிறுவனமாம். இப்போது மாதம் 10,000 வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது தான் மாருதி சுசூகிக்கு இருக்கும் ஒரே நோக்கமாம்.

AgVa Healthcare
 

AgVa Healthcare

இந்த AgVa Healthcare நிறுவனம் தான், தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் வெண்டிலேட்டர்களின் டெக்னாலஜி, செயல்பாடுகள் மற்றும் வெண்டிலேட்டர் சார்ந்த அனைத்துக்கும் பொறுப்பாம். மாருதி சுசூகி நிறுவனம் வெறுமனே, AgVa Healthcare நிறுவன சப்ளையர்களை பயன்படுத்தி போதுமான வால்யூம்களில் உற்பத்தியை பெருக்குமாம். அதோடு மாருதி சுசூகி தன் அனுபவம் மற்றும் அறிவை வைத்து உற்பத்தி முறையை மேம்படுத்துமாம். அதோடு அதிக எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்களை தயாரிக்கும் போது அதன் தரத்தையும் மாருதி சுசூகி கவனத்தில் கொள்ளுமாம்.

மாஸ்க்

மாஸ்க்

வெண்டிலேட்டருக்கு அடுத்த படியாக, மருத்துவர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை பலருக்கும் பயன்படக் கூடிய மாஸ்கையும் மருதி தயாரிக்கிறார்களாம். கிருஷ்ணா மாருதி லிமிடெட் கம்பெனி, 3 அடுக்கு கொண்ட மாஸ்கை (three-ply masks) தயாரிப்பார்களாம். இந்த நிறுவனம் தயாரிக்கும் மாஸ்குகள், ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கும் சப்ளை செய்ய இருக்கிறார்களாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

மாருதி சுசூகி நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி ஆலைகளிலும், வேலை பார்க்கும் ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படும் எனச் சொல்லி இருக்கிறது மாருதி சுசூகி இந்தியா நிறுவனம். விரைவில் கொரோனா ஒழியட்டும், மீண்டும் சகஜ நிலை திரும்பட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti suzuki announced arrangement with AgVa Healthcare to increase ventilator production

Maruti suzuki india officially announced an arrangement with AgVa Healthcare to increase the production of ventilators.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X