ஆஹா பிரமாதம்.. பைக் வாங்கும் செலவில் பாதி கொடுத்தாலே கார் கிடைக்கும்.. மாருதி சுசுகி அசத்தல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: விலைவாசி ஏறிப்போச்சு.. மக்கள் கையில் பணமும் இல்லை.. கார் சேல்ஸ் ஆகமாட்டேங்குது.. இப்படியான நிலையில்தான், மாருதி சுசுகி நிறுவனம் ஒரு புது முயற்சியை முன்னெடுத்துள்ளது.

 

இந்த புது சலுகை மூலம், தனது கார்கள் விற்பனையை அதிகரிக்க முடியும் என நம்புகிறது, மாருதி சுசுகி. அப்படி என்ன திட்டம் என்கிறீர்களா? விஷயம் இதுதான்:

தற்போது, ​​வங்கிகள் சராசரியாக ஒரு காரின் 'ஆன் ரோடு' விலையில் 80% கடன் நிதியளிக்கின்றன, மீதமுள்ள தொகை, வாடிக்கையாளரால் கார் விற்பனை ஷோரூமில், கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.

10 சதவீதம் போதும்

10 சதவீதம் போதும்

கடுமையான பாதுகாப்பு மற்றும் எமிஷன் விதிமுறைகளின் தேவைகள் காரணமாக கார்கள் விலை உயர்ந்த நிலையில், வாடிக்கையாளரின் சுமையும் அதிகரித்துவிட்டது. 20 சதவீதம் பணத்தை முதலிலேயே கொடுக்க நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 10 சதவீதம் மட்டும் டவுன் பேமென்ட் போதும் என்ற முடிவுக்கு மாருதி சுசுகி வந்துள்ளது.

பைக் செலவுதான்

பைக் செலவுதான்

ஒரு என்ட்ரி லெவல் சிறிய காருக்கு சுமார் 4 முதல் 4.50 லட்சம் செலவாகும். 10 சதவீத தொகை மட்டும் அளித்தால் போதும் என்றால், ரூ.40,000 முதல் 45,000 மட்டுமே கையிலிருந்து வாடிக்கையாளருக்கு செலவாகும். இது ஒரு 150 சிசி மோட்டார் பைக்கின் மொத்த தொகையில் பாதி அளவுக்குதான் என்பதால், வாடிக்கையாளர்கள், தங்களது கார்களை வாங்குவார்கள் என கருதுகிறது மாருதி சுசுகி.

முயற்சி எடுக்கும் மாருதி
 

முயற்சி எடுக்கும் மாருதி

மாருதி சுசுகியின் இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கோட்டக் மஹிந்திரா வங்கியுடன் கூட்டாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டு இறுதி வரை முன்னோட்டமாக இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். பிறகு வரவேற்பை பொறுத்து நீட்டிக்கப்படும். கார் மார்க்கெட் லீடராக, மாருதி சுசுகி, இந்த தொழிலின் மறுமலர்ச்சிக்கு முன்முயற்சி எடுத்து பாடுபடுவது எங்கள் கடமையாகும், இந்த முன்முயற்சியின் மூலம், வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் சில சுமைகளை குறைக்க முயற்சிக்கிறோம்," என்றார், ஸ்ரீவஸ்தவா.

பல வங்கிகள்

பல வங்கிகள்

இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் வங்கி கோட்டக் என்றாலும், இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாருதி மேலும் நாலைந்து, "பெரிய வங்கிகளுடன்" பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்ரீவாஸ்தவா கூறினார். இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு, அதிலும், குறிப்பாக நுழைவு நிலை வாகனங்களை வாங்குபவர்களுக்கு உதவக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம். " என்று அவர் கூறியுள்ளார்.

பணம் சப்ளை

பணம் சப்ளை

அரசு சமீபத்தில் நடத்திய, உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், பொருளாதார மந்தநிலைக்கு நிதியுதவி போதிய அளவுக்கு மக்கள் கையில் கிடைக்காதது ஒரு முக்கிய காரணம் என்று அடையாளம் காணப்பட்டது. எனவே, எஸ்பிஐ மற்றும் கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகளுடன் கூட்டு ஏற்படுத்தி, கடன் வழங்க பல நிறுவனங்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki cars offer: You can get cars by paying 10% less down payment

Maruti is teaming up with banks to lower the cash outgo that you pay for buying a new car.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X