மாருதி சுசூகி திடீர் முடிவு.. இனி டீசல் கார் கிடையாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெஸ்லா-வின் வெற்றிக்கு பின்பும், உலக நாடுகளில் பருவநிலை மாற்றத்திற்குப் பின்பும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்கும் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்த முடிவு செய்து வந்தது.

 

இந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி உயர்வு..!

இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் உற்பத்தியைத் துவங்கினாலும் உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை நிறுத்தம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

சமீபத்தில் கூட ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 2023ல் Spectre என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவும், 2030க்குள் பெட்ரோல் கார் உற்பத்தியை மொத்தமாக நிறுத்திவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் மாருதி சுசூகி டீசல் கார் உற்பத்தியை விரைவில் முழுமையாக நிறுத்திவிட்டு இயற்கை எரிவாயு மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த மாற்றம் அரசின் திட்டத்திற்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மத்திய அரசு ஹேப்பி
 

மத்திய அரசு ஹேப்பி

மத்திய அரசு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மாற்று எரிபொருளில் இயங்கும் பிளக்ஸ் இன்ஜின் மற்றும் ஹைரடஜன் வாயு மூலம் இயங்கும் கார்களைத் தயாரிக்க வேண்டும் எனவும், அடுத்த சில மாதத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் என்றும் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்தார்.

மாருதி சுசூகி-யின் ஆதிக்கம்

மாருதி சுசூகி-யின் ஆதிக்கம்

மத்திய அரசு இந்த மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை வேகமாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில் மாருதி சுசூகி போன்ற முன்னணி நிறுவனங்களின் அறிவிப்புச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

முக்கியத் திட்டங்கள் ரத்து

முக்கியத் திட்டங்கள் ரத்து

மாருதி சுசூகி இந்த அறிவிப்பு மூலம் Brezza எஸ்யூவி டீசல் கார் திட்டம், சிறிய ரக டீசல் கார்கள், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தயாரிப்பு ஆகிய பல முக்கியமான திட்டங்களைக் கைவிட்டு உள்ளது. இதேபோல் மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த 2 வருடத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான CNG கார்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான உற்பத்தி மற்றும் வர்த்தகப் பணிகளைச் செய்ய உள்ளது.

வர்த்தகம் லாபத்தில் பாதிப்பு

வர்த்தகம் லாபத்தில் பாதிப்பு

மாருதி சுசூகி நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் கார் விற்பனை உச்சத்தில் இருக்கும்போது இத்தகைய முடிவு இந்நிறுவனத்தின் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2024 மார்ச் மாதத்திற்குள் மாருதி சுசூகி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் நான்கில் ஒரு பங்கு சிஎன்ஜி வாகனங்களாக இருக்க வேண்டும் என மாருதி சுசூகி நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மின்சாரப் பற்றாக்குறை

மின்சாரப் பற்றாக்குறை

இந்தியாவில் ஏற்கனவே மின்சாரப் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி இந்தியாவைப் பாதிக்கலாம், இதனால் அரசும் சரி, ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சரி எலக்ட்ரிக் வாகனங்களைக் காட்டிலும் சிஎன்ஜி மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களின் தயாரிப்பு மற்றும் உற்பத்தியை ஆதரித்து வருகிறது.

எலக்ட்ரிக் கார்கள்

எலக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் உபரி மின்சாரம் உருவாகும் போது எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பது சரியாக இருக்கும் என்ற கருத்தும் சந்தையில் உள்ளது.

இந்தியாவுக்கு எது பெஸ்ட் எலக்ட்ரிக் கார்களா அல்லது மாற்று எரிபொருள் கார்களா..? உங்கள் பதிலை கமெண்ட் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti suzuki decided to stop diesel cars ASAP, Big Plans for CNG cars

Maruti suzuki decided to stop diesel cars ASAP, Big Plans for CNG cars
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X