ஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்த மாருதி சுசூகி.. நிதி பிரச்சனைக்காக அதிரடி திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவினால் முடங்கியுள்ள வாகன சந்தையினை தூக்கி நிறுத்தும் பொருட்டு மாருதி சுசூகி நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது.

 

கொரோனாவின் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ள கார் விற்பனையானது, நிதி பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் முடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு நிதி பிரச்சனை எளிதாக தீர்க்கும் வகையில் ஆக்ஸிஸ் வங்கியும், மாருதி சுசூகியும் இணைந்து flexible Equated Monthly Instalment என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்த மாருதி சுசூகி.. நிதி பிரச்சனைக்காக அதிரடி திட்டம்..!

இது மக்கள் கையில் பணப்புழக்கத்தினை எளிதாக்கும். இதனால் தற்போது கொரோனா நெருக்கடியின் காரணமாக வாடிக்கையாளர்கள், மாத இஎம்ஐ திரும்ப செலுத்தும் அழுத்தத்தில் இருந்தும் வாடிக்கையாளர்களை காக்கும் என்றும் மாருதி கூறியுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி மாருதி சுசூகியில் சில்லறை வர்த்தகத்தில் உள்ள வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும். இது பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் பிரிவுகளுக்கு வாகன கடன்களை வழங்குகிறது. இது சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் மக்களை வட்டி வதைத்து வரும் நிலையில், மக்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் அக்கறை கொண்டுள்ளனர். மேலும் மக்கள் மனதில் சமூக இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

ஒரு வேளை கொரோனாவே இல்லாவிட்டாலும் கூட, இன்னும் சில ஆண்டுகளுக்கு சமூக இடைவெளியுடன் இருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும், சொந்த வாகனங்களை போக்குவரத்திற்காக பயன்படுத்த எண்ணுகின்றனர். இதன் காரணமாக வாகன விற்பனையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆக்ஸிஸ் வங்கியுடனான கூட்டு முயற்சி நிச்சயம் எங்களுக்கு கைகொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வாகனம் வாங்க இது உதவியாக இருக்கும் என்றும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் தொற்று நோய், மாருதி சுசூகியில் கார் வாங்குபவர்களுக்கு இந்த பிளக்ஸி நிதி திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் ஒத்துழைப்பது என்பது முதல் முறை அல்ல. கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர். இந்த இரு நிறுவனங்களும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை அடைய, இந்த வலுவான இணைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் மாருதி சுசூகி 3,000 மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. இதே ஆக்ஸிஸ் வங்கியானது 4,500க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

maruti Suzuki india and Axis bank partnership to provide easy solution for finance

Flexible EMI options.. maruti Suzuki india and Axis bank partnership to provide easy solution for vehicle loans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X