டிசம்பரில் சாதனை படைத்த மாருதி சுசூகி.. கிடு கிடுவென ஏற்றம் கண்ட பங்கு விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி. கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வீழ்ச்சியை மட்டுமே கண்டு வந்த நிலையில், விற்பனையை கூட்ட பலத்த சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது.

 

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனையானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.4 சதவிகிதம் அதிகரித்து 1,33,296 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

டிசம்பரில் சாதனை படைத்த மாருதி சுசூகி.. கிடு கிடுவென ஏற்றம் கண்ட பங்கு விலை..!

இதற்கு முக்கிய காரணம் புதிய வேகன் ஆர் போன்ற காம்பக்ட் ரக கார்களுக்கான அதிக தேவையே என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே சிறிய ரக கார்களுக்கான தேவை குறைந்த போதிலும் அதை ஈடு செய்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கடந்த நவம்பரில் விற்பனை 3.3 சதவிகிதம் சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாருதி சுசூகி இந்தியா உள்நாட்டு சந்தையில், கடந்த டிசம்பர் மாதத்தில் 1,24,375 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் 1,21,479 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே ஏற்றுமதியுடன் சேர்த்து 3.9 சதவிகிதம் விற்பனையை அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. அதன் படி 1,33,296 வாகனங்களையும் விற்பனையை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

குறிப்பாக மினி ரக கார்களான ஆல்டோ, எஸ் பிரஸ்ஸொ, வேகன் ஆர் விற்பனை 13.6 சதவிகிதம் குறைந்து 23,883 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் காம்பாக்ட் ரக கார்களான நியூ வேகன் ஆர், ஸ்விப்ட், செலிரியோ, டிசையர் உள்ளிட்ட கார்கள் விற்பனை 28 சதவிகிதம் அதிகரித்து 65,673 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதே நடுத்தர அளவுள்ள கார்களான சியாஸ் விற்பனை 62.3 சதவிகிதம் குறைந்து 1,786 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 17.7 சதவிகிதம் அதிகரித்து 23,808 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

எப்படி எனினும் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலத்தில் உள் நாட்டு விற்பனை 17 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 1.1 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki officially announced car sales increased 2.4% in December month

Maruti Suzuki officially announced car sales increased 2.4% to 1,33,296 units in December month. but November month its drop in 3.3 percent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X