டெல்லி: கடந்த ஆண்டு முழுவதுமே உற்பத்தி வீழ்ச்சி, விற்பனை வீழ்ச்சி, லாபம் குறைவு, வருவாய் இழப்பு என அனைத்தும் நிறுவனத்திற்கு எதிர்மாறாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 3% மேலாக அதிகரித்துள்ளது.
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் இந்தளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதே என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதலே பெரும் விற்பனை வீழ்ச்சியை கண்டு வந்த நிலையில், உற்பத்தியையும் குறைத்தது. அதுவும் கொரோனாவுக்கு பிறகு உற்பத்தி, விற்பனை என அனைத்தும் முடங்கின.
எனினும் தற்போது முடிவடைந்த விழாக்கால பருவத்தில் தான் விற்பனை ஓரளவுக்கு அதிகரித்ததாக இந்த நிறுவனம் கூறியிருந்தது. அதோடு நடப்பு நிதியாண்டில் உற்பத்தி அதிகரிக்கலாம் என்று இந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து, 7,206.85 ரூபாயாக வர்த்தகமாகி வர்த்தகமாகியுள்ளது முந்தைய அமர்வில் இந்த நிறுவனத்தின் முடிவு விலையானது 6,986 ரூபாயாக முடிவடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங்க் அவரேஜ்ஜூக்கு மேல் உள்ளது கவனிக்கதக்க விஷயம். இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 2.09% அதிகரித்து (அ) 146 ரூபாய் அதிகரித்து 7,133 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ஒரு வருடத்தில் 1.07% அதிகரித்துள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3.17% சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பானது 2.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தான் நடப்பு நிதியாண்டில் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் இதன் உற்பத்தி குறையும் என்று மதிப்பிட்டிருந்த நிலையில், தற்போது 2 - 11% அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது பட்டையை கிளப்பிக் கொண்டு ஏற்றம் கண்டுள்ளது.