ஆத்தி... IIT, IIM பசங்க வேணாம்யா! தெறித்து ஓடும் நடுத்தர கம்பெனிகள்! ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் வெறுமன ஒரு மனிதனின் உடல் நலத்தை மட்டும் குறி வைக்கவில்லை. மனிதர்களின் அடிப்படை வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் தனி மனித பொருளாதாரத்திலும் கை வைத்து இருக்கிறது.

அல்லாடும் IIT, IIM & மற்ற கல்லூரி மாணவர்கள்! கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்!
 

பல்வேறு கம்பெனிகளில் ஆட்களை புதிதாக வேலைக்கு எடுப்பது கடந்த மார்ச் 2019-ஐ விட மார்ச் 2020-ல் 18 % சரிந்து இருப்பதாக நாக்ரி ஜாப் ஸ்பீக் (Naukri JobSpeak) சர்வே சொல்கிறது.

ஏற்கனவே சுற்றுலா, பயணம், விமான சேவை, ஹோட்டல்கள், சில்லறை வணிகம் என பல்வேறு துறைகளும், கொரோனா வைரஸால் நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

என்ன பாதிப்பு

என்ன பாதிப்பு

மேலே சொன்ன துறைகளில் கடந்த மார்ச் 2019-ல் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுத்த எண்ணிக்கையை, இந்த மார்ச் 2020 உடன் ஒப்பிட்டால் சுமார் 50 சதவிகிதத்துக்கு மேல் குறைவாகவே ஆட்களை வேலைக்கு எடுத்து இருக்கிறார்களாம். பொதுவாகவே ஜனவரி 2020 முதல் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பது குறைந்து வந்ததாம்.

எந்த துறைகளில் எவ்வளவு டவுன்

எந்த துறைகளில் எவ்வளவு டவுன்

ஹோட்டல் சுற்றுலா விமான சேவைத் துறைகளில் 56 %, சில்லறை வணிகத்தில் 50 %, ஆட்டோமொபைல் 38 %, பார்மா துறையில் 26 %, இன்சூரன்ஸ் 11 %, நிதித் துறை 10 %, ஐடி 9 %, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் 9 % என பரவலாகவே மார்ச் 2019-ஐ விட மார்ச் 2020-ல் குறைவாகவே ஆட்களை வேலைக்கு எடுத்து இருக்கிறார்கள்.

எந்த நகரங்களில்
 

எந்த நகரங்களில்

டெல்லி நகரத்தில் கடந்த மார்ச் 2019-ஐ விட மார்ச் 2020-ல் 26 % குறைவாகவே வேலைக்கு ஆட்களை எடுத்து இருக்கிறார்களாம். டெல்லியைத் தொடர்ந்து நம் சென்னையில் 24 %, ஹைதராபாத் 18 %, கொல்கத்தா 15 %, பெங்களூரு 15 %, மும்பை 14 % மார்ச் 2019-ஐ விட மார்ச் 2020-ல் வேலைக்கு ஆட்களை குறைவாகவே எடுத்து இருக்கிறார்களாம்.

அனுபவம்

அனுபவம்

இதில் கவனிக்க வேண்டிய ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், 13 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்களைக் கூட மார்ச் 2020-ல் 29 % குறைவாகவே வேலைக்கு எடுத்து இருக்கிறார்களாம். 8 - 12 வருடம் பணி அனுபவம் கொண்டவர்களை 20 % குறைவாகவும், 4 - 7 வருடம் பணி அனுபவம் கொண்டவர்களை 16 % குறைவாகவும், 0 - 3 வருடம் பணி அனுபவம் கொண்டவர்களை 16 % குறைவாகவும் வேலைக்கு எடுத்து இருக்கிறார்களாம்.

ஐஐடி ஐஐஎம்

ஐஐடி ஐஐஎம்

சமீபத்தில் தான், ஐஐடி ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு கூட வேலை கிடைப்பதில், சிரமம் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன? நடுத்தர & வளரும் நிறுவனங்களில் வேலை கிடைக்குமே என்று கேட்கிறீர்களா..? அங்கும் ஐஐடி ஐஐஎம் மாணவர்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது.

நோ சொல்லும் நடுத்தர கம்பெனிகள்

நோ சொல்லும் நடுத்தர கம்பெனிகள்

நாக்ரி ஜாப் ஸ்பீக் அறிக்கைகள் போக, ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவன தலைவர் "ஐஐஎம் & ஐஐடி கல்லூரி மாணவர்களை, பல நடுத்தர நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க விரும்பவில்லை. இதற்கு முன் ஐஐடி ஐஐஎம் போன்ற பெரிய கல்லூரிகளில் படித்த மாணவர்களை வேலைக்கு எடுத்த கசப்பான அனுபவங்கள் தான் அதற்குக் காரணம்" என்கிறார்

வேண்டாம்

வேண்டாம்

மேலும் பேசிய அந்த உயர் அதிகாரி "ஐஐடி ஐஐஎம் மாணவர்கள், அதிகம் சம்பளம் கேட்பார்கள், அதோடு வேலையில் நீண்ட நாட்கள் இருக்கமாட்டார்கள். எனவே ஐஐடி ஐஐஎம் மாணவர்களை, பல நடுத்தர கம்பெனிகள் வேலைக்கு எடுப்பதில்லை என தெளிவாக இருக்கிறார்கள்" என்கிறார். ஆக ஒட்டு மொத்த இந்தியாவில் வேலை வாய்ப்பு படு மந்தமாக இருக்கிறது என்பதை மட்டும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mid size companies saying no to IIT IIM graduates

The mid size companies are clearly saying no for IIT IIM graduates to their personal bad experience in the past. They demand more salary and retention rates are also very low.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X