ஒரே நாளில் லாபத்தை காலி செய்த ஐஆர்சிடிசி.. ரயில்வே அமைச்சகத்தின் திடீர் முடிவு தான் காரணமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய இன்ட்ராடே வர்த்தக அமர்வில் ஐஆர்சிடிசி பங்கு விலையானது 29% சரிவினைக் கண்டது. இன்றைய குறைந்தபட்ச விலையானது இதுவரையில் 639.45 ரூபாய் வரையில் சென்றது. இன்றைய அதிகபட்ச விலை 906.45 ரூபாயாக உள்ளது.

 

எனினும் தற்போது பங்கு விலையானது 56.45 ரூபாய் குறைந்து, 857.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இரண்டாக உடையும் காட்ரிஜ் குழுமம்.. குடும்ப சொத்துக்கள் பிரிப்பு..!

இந்த பலத்த சரிவு ஏன்? என்ன தான் காரணம்? இனியும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

கட்டணத்தில் பங்கு வேண்டும்

கட்டணத்தில் பங்கு வேண்டும்

இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு தொடர்பான விஷயங்களை ஐஆர்சிடிசி நிறுவனம் கையாண்டு வருகிறது. இதற்காக சேவைக் கட்டணத்தையும் (convenience) ஐஆர்சிடிசி வசூலித்து வருகின்றது. இந்த கட்டண வருவாயில் கிடைக்கும் வருமானத்தில், நவம்பர் 1ம் தேதி முதல் வசூலிக்கப்படும் கட்டணத்தில் 50% அரசிடம் வழங்கும்படி, ஐஆர்சிடிசி வழங்கும்படி ரயில்வே அமைச்சகம் கேட்டது.

பலத்த வீழ்ச்சி

பலத்த வீழ்ச்சி

இதனையடுத்து தான் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்கு விலையானது இன்றைய உச்சமான 906 ரூபாய் இருந்து பார்க்கும்போது, 39% வீழ்ச்சி கண்டு, பின்னர் தற்போது சற்றே ஏற்றம் கண்டு கொண்டு இருக்கின்றது. ஏனெனில் இதனால் ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தில் பலத்த சரிவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுபாடுகளா?
 

கட்டுபாடுகளா?

ஏற்கனவே நடப்பு நிதியாண்டில் கொரோனா நெருக்கடியால் பயணிகள் வருகை குறைந்தது. இதனால் ஐ ஆர் சி டி சி-யின் வருவாயும் பலத்த சரிவினைக் கண்டது. இதற்கிடையில் சமீபத்தில் தான் ஐ ஆர் சி டி சி நிறுவனத்திற்கு ரெகுலட்டர் ஒருவரை நியமிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் அக்டோபர் 19 அன்று ஐ ஆர் சி டி சி பங்குகள் கடுமையான சரிவினைக் கண்டன.

ரயில்வே அமைச்சகம் கைவிடல்

ரயில்வே அமைச்சகம் கைவிடல்

மேலும் சமீபத்திய வராங்களுக்கு முன்பு தான் இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்சத்தினையும் தொட்ட நிலையில், தற்போது தொடர்ந்து சரிந்து வருகின்றது. எப்படியிருப்பினும் ரயில்வே அமைச்சகம் தற்போது தனது முடிவினைக் கைவிட்டுள்ள நிலையில், ஐ ஆர் சி டி சி பங்கு விலையானது மீண்டும் ஏற்றம் காணலாம்.

நல்ல வாய்ப்பு உண்டு

நல்ல வாய்ப்பு உண்டு

மேலும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், ரயில்வே சேவையும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் வரவிருக்கும் காலாண்டில் இதன் லாபம் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம். இந்த சரிவானது மீண்டும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையலாம். இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்

நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்

மேலும் ஐ ஆர் சி டி சி-யின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு காரணம், இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் புக்கிங் சேவையில் ஐஆர்சிடிசி மோனோபோலியாக இருக்கும் காரணத்தால் யாராலும் அசைக்க முடியாத நிலையில் உள்ளதே. ஆக வரவிருக்கும் காலாண்டுகளில் இது மேற்கொண்டு வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ministry of Railway decided to withdraw the decision on IRCTC convenience fee

Ministry of Railway decided to withdraw the decision on IRCTC convenience fee
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X