வெறும் 5 நாள்தான்.. இரண்டே விண்ணப்பங்கள் போதும்.. இனி ஈஸியாக யாரும் தொழில் தொடங்கலாம்.. அரசு அதிரடி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வெறும் ஐந்தே நாட்களில் குறைந்தபட்ச நடைமுறைகளை மட்டும் பின்பற்றி, ஒரு தொழிலை உங்களால் துவக்க முடியும். ஆம்.. மத்திய அரசு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை தொழில்முனைவோருக்கு கொடுத்துள்ளது.

 

10 முக்கியமான துறைகள் இதுபோன்ற துரிதமான பிரிவின் கீழ் வருகிறது. இன்கார்பொரேஷன், ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பல்வேறு விதமான பதிவுகள் போன்றவற்றுக்கு வெறும் இரண்டு விண்ணப்பங்கள் மூலமாக அனுமதி அளிக்கக் கூடிய நடைமுறையை மத்திய தொழில் விவகாரத்துறை அமைச்சகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது இதுபோன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு விண்ணப்பங்கள் நிரப்பப்பட வேண்டியது உள்ளன. எனவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஐடி துறைக்கு அது மரண காலாண்டு தான்.. கதறும் ஊழியர்கள்.. கொதித்து எழும் நிறுவனங்கள்..!

இரு வகை விண்ணப்பம்

இரு வகை விண்ணப்பம்

ஸ்பைஸ் பிளஸ் (Spice Plus) மற்றும் ஆகில் புரோ (Agile Pro) ஆகிய இருவகையான விண்ணப்பங்களை தொழில் விவகாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு படிவங்களும் GSTIN, PAN, TAN, ESIC, EPFO, DIN, வங்கி கணக்குகள் மற்றும் தொழில்முறை வரி உள்ளிட்ட அனைத்துக்குமான திறவுகோலாக அமைய உள்ளன.

ஈஎஸ்ஐ, பிஎப்

ஈஎஸ்ஐ, பிஎப்

இந்த விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக நிரப்பப்பட கூடியவை. ஸ்பைஸ் பிளஸ் என்ற விண்ணப்பம் பெயர், இன்கார்பொரேஷன் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும். இன்கார்ப்பொரேஷன் செய்யக்கூடிய காலகட்டத்திலேயே, ESIC, EPFO ஆகியவற்றையும் செய்துவிடமுடியும்.

உலக வங்கி
 

உலக வங்கி

சமீபத்தில் உலக வங்கி, உலகத்திலேயே எளிதாக தொழில் துவங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு, 136 ஆவது இடத்தை கொடுத்தது. ஒரு தொழிலை துவங்குவதற்கு இந்தியாவில் குறைந்தபட்சம் 18 நாட்கள் தேவைப்படும். 10 வகையான வழிமுறைகளை தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டி இருக்கிறது என்று உலக வங்கி குறிப்பிட்டிருந்தது.

வங்கி பணி துரிதம்

வங்கி பணி துரிதம்

இந்த நிலையில்தான், எளிமையாக, தொழில் துவங்குவது மத்திய அரசின் முக்கிய இலக்காக உள்ளது. இன்கார்ப்பரேஷன் பணிகளின்போது வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்பதற்காக, 8 வங்கிகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த பணிகளை அந்த வங்கிகள் துரிதமாக செய்து கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Government to cut time taken to start new business to 5 days

Modi Government to cut time taken to start new business to 5 days, says ministry sources.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X