ஆப்பிள் நிறுவனத்திற்கு மோடி அரசு வைத்த டார்கெட்.. சாத்தியமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிகளவிலான உற்பத்தியை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களான ஐபோன் 13 சீரியஸ் போன்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ள வேளையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியமான கோரிக்கையை ஆப்பிள் நிறுவனத்தின் முன் வைத்துள்ளது.

 

வெறும் 2 ரூபாயில் ரூ.36,000 பென்ஷன்.. மோடி அரசின் சிறப்பான திட்டம்..!

 மோடி அரசு

மோடி அரசு

மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. இந்த இலக்கை அடைய பல PLI திட்டம் உட்படப் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது.

 ஆப்பிள், சியோமி, சாம்சங்

ஆப்பிள், சியோமி, சாம்சங்

இந்தியாவில் தற்போது ஆப்பிள் மட்டும் அல்லாமல் சியோமி, சாம்சங் உட்படப் பல மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை இந்தியாவில் செய்து வருகிறது, ஆனால் ஆப்பிள் நிறுவனம் கொஞ்சம் மத்திய அரசுக்கு ஸ்பெஷல்.

 ஆப்பிள் உற்பத்தி
 

ஆப்பிள் உற்பத்தி

இந்தியாவில் பிற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரித்தாலும் இதில் பெரும் பகுதி இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது, ஆனால் ஆப்பிள் உற்பத்தியில் பெரும் பகுதி வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்திற்குப் பெரிய அளவில் நன்மை அளிக்கிறது.

 50 பில்லியன் டாலர்

50 பில்லியன் டாலர்

இந்த நிலையில் தான் மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5-6 வருடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய உற்பத்தியை 50 பில்லியன் டாலர் வரையில் உயர்த்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது.

 ஐபோன் மட்டும் போதாது

ஐபோன் மட்டும் போதாது

இந்த இலக்கை அடைய ஆப்பிள் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மட்டும் அல்லாமல் மேக்புக், ஐபேட், ஏர் பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றையும் தயாரிக்கத் துவங்க வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

 டிம் குக்

டிம் குக்

டிம் குக் தலைமையில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் உற்பத்தி இன்ஜின் ஆக மாற்ற வேண்டும் என முக்கியமான திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உடன் அரசு அதிகாரிகள், முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்ட சந்திப்பில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு ஆப்பிள் நிறுவனம் சீனாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் செய்த அதே மேஜிக்-ஐ இந்தியாவில் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.

 பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரன்

பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரன்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரன் ஆகிய 3 முக்கிய நிறுவனங்களும் இந்தியாவில் இருக்கும் காரணத்தால் 50 பில்லியன் டாலர் இலக்கை அடைவதும் உற்பத்தியை மேம்படுத்துவதும் கஷ்டமான விஷயம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt asks Apple make $50 billion worth of production with Macbooks, iPads, airpods, watches

Modi Govt asks Apple make $50 billion worth of production with Macbooks, iPads, airpods, watches ஆப்பிள் நிறுவனத்திற்கு மோடி அரசு வைத்த டார்கெட்.. சாத்தியமா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X