ஏர் இந்தியா-க்கு போட்டியாக ஆகாஷ் ஏர்லையன்ஸ்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஓகே சொன்ன அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையை வேகமாக வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு இத்துறையில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக விமான நிலையங்கள் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கியது.

 

இதேவேளையில் இந்தியாவில் 2ஆம் தர நகரங்களில் இருக்கும் விமான நிலையைத்தை விரிவாக்கம் செய்யவும், சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்த 5 முதல் 10 வருடத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவில் இருப்பது போல் இந்தியாவிலும் உள்நாட்டு விமானச் சேவைகள் மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாட்களில் ரூ.375 கோடி லாபம்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை.. நீங்க வாங்கியிருக்கீங்களா..?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த, இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரும், இந்தியாவின் வாரன் பபெட் எனச் செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா புதிதாக ஒரு விமானச் சேவை நிறுவனத்தைத் துவங்க முடிவு செய்துள்ளார்.

ஸ்டார்அப் நிறுவனம்

ஸ்டார்அப் நிறுவனம்

இதற்கான அறிவிப்பைப் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தாலும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முக்கிய முதலீட்டாளராக இருக்கும் ஸ்டார்அப் நிறுவனம் துவங்க இருக்கும் ஆகாஷ் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

ஆகாஷ் ஏர்லையன்ஸ்
 

ஆகாஷ் ஏர்லையன்ஸ்

வினய் துபே தலைமையில் உருவான SNV ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் தான் ஆகாஷ் ஏர்லையன்ஸ் சேவை துவக்கப்பட்ட உள்ளது. இந்த நிறுவனத்தின் நோக்கமே மிகவும் குறைந்த விலைக்கு (Ultra Low Cost) விமானச் சேவையை மக்களுக்கு அளிப்பது தான்.

மத்திய அரசு கொடுத்த NOC

மத்திய அரசு கொடுத்த NOC

இந்த SNV ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ளார். மத்திய அரசு தற்போது ஆகாஷ் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு NOC கொடுத்துள்ளது. இதன் மூலம் ஆகாஷ் ஏர்லையன்ஸ் முதல்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளது.

2022ல் ஆரம்பம்

2022ல் ஆரம்பம்

இதைத் தொடர்ந்து SNV ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிவில் ஏவியேஷன் துறையிடம் விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை பெற்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 2022 கோடைக் காலத்தில் ஆகாஷ் ஏர்லையன்ஸ் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சமீபத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜூன்வாலா ஆகியோர் பிரதமர் மோடியை டெல்லியில் நேரடியாகச் சந்தித்தனர். இதைத் தொடர்ந்து ஆகாஷ் ஏர்லையன்ஸ் துவங்குவதற்கு மத்திய அரசு NOC அளித்துள்ளது முதலீட்டுச் சந்தையிலும், ஏவியேஷன் துறையில் காட்டுத்தீ போலப் பரவியுள்ளது.

100 விமானங்கள்

100 விமானங்கள்

மேலும் ஆகாஷ் ஏர்லையன்ஸ் இந்தியாவில் மலிவு விலை விமானச் சேவை துவங்குவதற்காக 100 போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 விமானங்களையும் வாங்க விரைவில் ஆர்டர் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்த விமானங்களை வாங்க அதிகக் காத்திருப்புக் காலம் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt gave NOC to Rakesh Jhunjhunwala backed Akasa airline: Compition to Air india, Spicejet

Modi Govt gave NOC to Rakesh Jhunjhunwala backed Akasa airline: Compition to Air india, Spicejet
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X