2014க்கு பின் "ஒன்றிய அரசின்" பெட்ரோல் வரி வருவாய் 3.5 மடங்கு உயர்வு.. மக்கள் பர்ஸ் காலி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவுக்கு அடுத்து மக்களை அதிகளவில் வாட்டி வதைப்பது பெட்ரோல், டீசல் விலை என்றால் மிகையில்லை. குறிப்பாக நாடு முழுவதும் தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகளவில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெட்ரோலுக்காக மக்கள் அதிகத் தொகையைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 

சரி, உண்மையில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்பு பெட்ரோல் மீதான வரி எவ்வளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது..? உண்மை என்ன..?

பெட்ரோல் விலை உயர்வு.. டீசல் விலை சரிவு.. என்ன காரணம்..?!

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருவது குறித்துக் கடுமையான விமர்சனம் செய்து 2014ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இவரது ஆட்சியில் தான் பெட்ரோல் மீதான வரி மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது எனத் தரவுகள் கூறுகிறது.

 கலால் வரி அதிகரிப்பு

கலால் வரி அதிகரிப்பு

2014-15 நிதியாண்டு முதல் தற்போது வரையில் கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட பாதியாகக் குறைந்தது என்றால் மிகையில்லை, அப்படி இருக்கும் போது பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பு மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வரி வருமானம் கிடைத்துள்ளது.

 3.5 மடங்கு அதிகம்
 

3.5 மடங்கு அதிகம்

2014ல் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி மூலம் மக்கள் 9.48 ரூபாய் செலுத்தி வந்தனர், மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தியதன் மூலம் தற்போது 32.9 ரூபாய் அளவிற்கு வரியாகச் செலுத்தி வருகிறோம். இது கிட்டதட்ட 3.5 மடங்கு அதிகமாகவும்.

 வரி வருமானம்

வரி வருமானம்

மேலும் 2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி மூலம் 29,279 கோடி ரூபாய் வரியாகப் பெற்ற நிலையில் 2020-21ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதத்தில் மட்டும் 89,575 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்தைப் பெற்றுள்ளது.

 கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

இதேபோல் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலையிலும் பெரிய அளவில் சரிந்துள்ளது. 2014-15ஆம் நிதியாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சராசரியாக 84.16 டாலராக இருந்தது. இதவே 2020-21ஆம் நிதியாண்டில் 44.82 டாலராகச் சரிந்துள்ளது.

 மக்களின் பணம்

மக்களின் பணம்

கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்தும் மக்களிடம் இருக்கும் பணத்தை வரியாகப் பெறவேண்டும் என்று ஓரே நோக்கில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தற்போது நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது தினமும் வரலாற்று உச்ச விலையைப் பதிவு செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt tax collected on fuel has increased by 3.5 times since 2014-15

Modi govt tax collected on fuel has increased by 3.5 times since 2014-15
Story first published: Wednesday, July 14, 2021, 11:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X