பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பொறுப்பில் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளதால், பெண்களின் திருமண வயதை அதிகரிக்கப் பிரந்துரை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்தியா அடுத்த சீனாவா..?! முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..!

இந்தியா பொருளாதாரம் கடந்த 4 வருடமாகத் தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் நாட்டின் கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. இந்நிலையில் தனிநபர் வருமானத்தில் இந்தியாவை விடவும் பங்காளாதேஷ் மிகப்பெரிய அளவில் உயர்ந்து சீனாவில் ஏற்றுமதி வர்த்தகத்தைத் தொடர்ந்து கைப்பற்றிப் பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

வியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..!

நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இந்தத் தருணத்தில் பெண்களின் திருமண வயதை உயர்வது குறித்து முக்கியமான முடிவை எடுக்க உள்ளார் மோடி.

எஸ்பிஐ

எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கி தனது கூட்டணி நிறுவனங்களுக்கு அனுப்பிய அறிக்கையில், பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சமுக நலன் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நன்மைகள் உள்ளது என எஸ்பிஐ வங்கியின் பொருளாதார வல்லுனர்களில் ஒருவரான சௌமியா கான்டி கோஷ் தெரிவித்துள்ளார்.

நன்மைகள்

நன்மைகள்

பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் அதிகளவிலான பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்வது மட்டும் அல்லாமல் படிப்புக்குப் பின் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பெண்கள் நிதியியல் சுதந்தரம் அடைவோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

இதுமட்டும் அல்லாமல் பெண்களின் குறைந்த வயதில் தாய்மை அடைவதால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறையும், அதுமட்டும் அல்லாமல் பெண்களின் உடல் நலம் மேம்படும். இவை அனைத்தும் எஸ்பிஐ வெளியிட்டுள்ள "Increasing the legal age of women marriage: A dominant strategy for societal good, financially empowering women" என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குழு
 

மத்திய அரசின் குழு

இந்தியாவில் கடந்த 40 வருடங்களாகப் பெண்களின் திருமண வயது 18 வயதாக இருக்கும் நிலையில் இதை மாற்றுவது குறித்த ஆய்வை செய்ய ஜூன் மாதம் மத்திய அரசு ஜெயா ஜெட்லி தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் இக்குழுவின் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பெண்களின் திருமண வயது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இக்குழவின் தரவுகள் மற்றும் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் திருமண வயதும் 21 ஆக உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகச் சௌமியா கான்டி கோஷ் கூறுகிறார். இது மாற்றப்பட்டால் அடுத்த சில வருடத்தில் பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அளவான 9.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரையில் உயரும் எனவும் கூறுகிறார்.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் திருமண வயது உயர்த்துவதால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பது 100% சதவீதம் உண்மை.

ஆனால் மக்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், பெண்களின் திருமண வயதை உயர்த்தலாமா..? வேண்டாமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi planning to raise legal marriage age of women

Modi planning to raise the legal marriage age of women
Story first published: Friday, October 23, 2020, 21:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X