30,000 – 40,000 பேர் வேலை பறிக்கப்படலாம்.. கவலையில் ஐடி ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக தகவல் தொழில் நுட்ப துறையிலும் அதன் எதிரொலி காணப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த நடுத்தர அளவிலான 30,000 - 40,000 ஊழியர்களை வெளியேற்றக் கூடும் என்றும் இத்துறையை சேர்ந்த மூத்த வீரர் ஆன, டி வி மோகன் தாஸ் கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஐடி துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, இந்த வேலை இழப்புகளை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ஒரு நிகழ்வு தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..!ரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..!

பணி நீக்கம் தொடரலாம்

பணி நீக்கம் தொடரலாம்

மேற்கு பகுதியில் உள்ள அனைத்து துறைகளை போலவே இந்தியாவிலும் ஒரு துறை முதிர்ச்சியடையும் போது பலர் நடுத்தர மட்டத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அடுத்தடுத்த சம்பள உயர்வு செலுத்த சம்பளத்தின் மதிப்பு சேர்க்க மாட்டார்கள் என்று பாய் பிடிஐக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆக நிறுவனங்கள் இந்த அதிக சம்பளத்திற்கு தயங்கும் நிலையிலேயே இப்படி ஒரு பணி நீக்கம் செய்யப்படுகிறது.

அடிக்கடி நிகழும் நிகழ்வு தான்

அடிக்கடி நிகழும் நிகழ்வு தான்

மேலும் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் போது பதவி உயர்வு பரவாயில்லை. ஆனால் அது குறையும் போது அதிக சம்பளம் பெறும் நபர்கள் அதிக அளவில் இருப்பார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறான பணி நீக்கம் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இதனாலேயே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பணி நீக்கம் செய்யத் தூண்டப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் ஒரு நிகழ்வு தான் என்றும் பாய் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வு தான்
 

5 ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வு தான்

இது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நிகழும் ஒரு நிகழ்வு தான். இது மீண்டும் மீண்டும் நிகழப் போகும் ஒரு நிகழ்வு தான் என்று ஆரின் கேப்பிட்டல் மற்றும் மணிபால் குளோபல் எஜூகேஷன் சர்வீசஸ் தலைவர் பாய் தெரிவித்துள்ளார். இந்த வகையில் இந்த துறையில் 30,000 - 40,000 பணி நீக்கம் இருக்கலாம் என்றும் பாய் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வேலை கிடைக்கும்

மீண்டும் வேலை கிடைக்கும்

எனினும் இவ்வாறு வேலை இழப்பவர்களில் நிபுணர்களாக இருந்தால் அவர்களுக்கு மீண்டும் இத்துறையில் வாய்ப்பு கிடைக்கும். அதுவும் 80 சதவிகிதம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் வேலையை இழந்து தவிக்கும் அவர்களுக்கு, விரைவில் வேலை கிடைத்தால் நன்றே.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mohandas Pai said IT companies May lay off mid level employees

Mohandas Pai said IT companies May lay off mid level employees. Its regular issue only. after lay off 80% of those who lost jobs would have employment opportunities if they are specialists.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X