2021-க்குள் இந்தியா கடன் சுமை அதிகம் இருக்கும் வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும்! மூடீஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரும் 2021-ம் ஆண்டுக்குள், இந்தியா, பெரிய வளரும் நாடுகளுக்கு மத்தியில், அதிக கடனை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என, மூடீஸ் முதலீட்டாளர் சேவை, நேற்று (01 செப்டம்பர் 2020) சொல்லி இருக்கிறது.

 

கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல வளரும் நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை, அடுத்த சில ஆண்டுகளுக்கு, பெரிய வளரும் நாடுகளை, அதிக கடனில் வைத்திருக்கும் எனவும் சொல்லி இருக்கிறது .

பெரிய வளரும் நாடுகளின், அரசு வாங்கும் கடன், 2019-ம் ஆண்டின் அளவை விட, 2021-ம் ஆண்டின் முடிவில், சராசரியாக 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் எனவும் மூடீஸ் ஏஜென்சி எதிர்பார்க்கிறதாம்.

2021-க்குள் இந்தியா கடன் சுமை அதிகம் இருக்கும் வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும்! மூடீஸ்!

இந்த கடன் அளவு அதிகரிப்புக்கு, பிரைமரி டெபிசிட் (Primary Deficit) உயர்வது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறது மூடிஸ்.

அதோடு, சில நாடுகள் அதிக கடன் வாங்கி இருப்பதால் அதிகம் வட்டி செலுத்த வேண்டி வரலாம். இதனாலும் கடன் மேலும் அதிகரிக்கலாம் என்கிறது மூடீஸ்.

2021-ம் ஆண்டு வாக்கில், பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடன் சுமை, வளரும் நாடுகளிலேயே, அதிகமாக இருக்கும் எனவும் மூடிஸ் அடிக்கோடு போட்டுச் சொல்லி இருக்கிறது.

இந்தியா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில், நிதித் துறை பலவீனமாக இருக்கிறது. அதோடு சில நாடுகளில் contingent liability பிரச்சனைகளும் இருக்கின்றன. இந்த பிரச்சனைகள், மேலே சொன்ன நாடுகளின் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது எனச் சொல்கிறது மூடீஸ்.

39,086-ல் நிறைவடைந்த சென்செக்ஸ்! மீண்டும் ஏற்றப் பாதையில் சந்தை!

இந்தியாவில், செயல்படாத கடன்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சொத்துக்களின் தரத்தினால் இந்திய வங்கித் துறை பாதிக்கப்படுகிறது. அதோடு low loan-loss coverage மற்றும் capital adequacy பிரச்சனைகளாலும் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது மூடீஸ் முதலீட்டாளர் சேவை ஏஜென்சி.

 

மேலே சொன்ன பிரச்சனை, இந்திய அரசு வங்கிகளின் நிலை எனவும் குறிப்பிட்டுச் சொல்கிறது மூடீஸ்.

இந்திய நிதித் துறையில் இருக்கும் பலவீனம், இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் சொல்லி இருக்கிறது மூடிஸ் முதலீட்டாளர் சேவை ஏஜென்சி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Moody says large emerging markets to have highest debt burden by 2021 India among them

The Moody investor service agency says, the large emerging markets to have highest debt burden by 2021. India also among them.
Story first published: Wednesday, September 2, 2020, 21:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X