அனுஷ்கா 23, விராட் கோலி 237.. மனைவியை விட 10 மடங்கு அதிகம்.. எதில் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று ஒரு நபர் தன்னுடைய திறமையின் வழியாகவும், சமூக வலைதளங்கள் போன்ற மீடியாக்கள் வழியாகவும் பயங்கரமாக வளர்ந்து ஒரு தனி பிராண்டாகவே உருவாகி விட முடியும்.

 

இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள், நடிகர்கள், நடிகைகளை மிஞ்ச முடிவதில்லை. அந்த அளவுக்கு அவர்களின் பெயர்கள் மக்கள் மனதில் நிலைத்து விடுகிறது.

விராட் கோலி, ஷாரூ கான், அக்‌ஷய் குமார் என்கிற பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல... அவைகள் எல்லாமே இன்றைய வர்த்தக உலகில் ஒரு தனி பிராண்டுகள்.

இந்திய ரயில்வே கட்டணத்தில் சலுகை.. யாருக்கு எவ்வளவு.. இதோ தெரிஞ்சுக்கோங்க..!

பணம்

பணம்

பிராண்ட் என்றாலே பணம் தானே. இப்படி தங்கள் பெயரின் பிராண்டைப் பயன்படுத்தி பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் தொடங்கி, விளையாட்டு வீரர்கள் வரை பலரும் காசு சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் பெயரின் பிராண்ட் மற்றும் பிரபலமாக இருப்பதைப் பயன்படுத்தி விளம்பரங்கள் வழியாக நிறைய சம்பாதிக்கிறார்கள்.

பட்டியல்

பட்டியல்

இப்படி இவர்களின் பிராண்ட் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்திய நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பட்டியலை Duff & Phelps' என்கிற நிறுவனம் Duff & Phelps' celebrity brand valuation report என்கிற பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த பட்டியலில் யார் எல்லாம் இடம் பிடித்து இருக்கிறார்கள் தெரியுமா..?

நடிகர்கள்
 

நடிகர்கள்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 104.5 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ரன்வீர் சிங் 93.5 மில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும், 66.1 மில்லியன் பிராண்ட் மதிப்புடன் பாலிவுட்டின் காதல் மன்னனான ஷாரூ கான் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்களாம்.

சூப்பர் ஸ்டார்கள்

சூப்பர் ஸ்டார்கள்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் 42.5 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 8-வது இடத்திலும், சல்மான் கான் 55.7 மில்லியன் டாலருடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். ஆமிர் கான் 24.9 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 16-வது இடத்தில் இருக்கிறார்.

நடிகைகள்

நடிகைகள்

பத்மாவதி, சபக் போன்ற பாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்து இருக்கும் தீபிகா படுகோனே 93.5 மில்லியன் பிராண்ட் மதிப்புடன் 3-வது இடத்தில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக தன் நடிப்புத் திறமையால் வளர்ந்து வரும் ஆலியா பட் 45.8 மில்லியன் பிராண்ட் மதிப்புடன் 7-வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலின் டாப் 10 இடங்களில் இந்த இரண்டு பெண்கள் மட்டுமே இடம் பிடித்து இருக்கிறார்கள்.

புது வரவு

புது வரவு

ஆர்டிகள் 15, பாலா, அந்தா துன் போன்ற பாலிவுட் படங்களால் இந்தியா முழுக்க கவனம் ஈர்த்த ஆயுஷ்மான் குரானா 40.3 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 10-வது இடம் பிடித்து இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்து இருக்கிறார். தன் அட்டகாச ஸ்டண்ட்களாலேயே அனைவரையும் ஈர்த்த டைகர் ஸ்ராஃப் 24.2 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் 17-வது இடம் பிடித்து இந்த பட்டியலில் புது வரவாகி இருக்கிறார்.

விருஷ்கா ஜோடி

விருஷ்கா ஜோடி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி கடந்த 2019-ம் ஆண்டில் அவரின் பிராண்ட் மதிப்பு 237.5 மில்லியன் டாலருக்கு அதிகரித்து இருக்கிறது. அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட இந்தியனாகவும் வலம் வருகிறார். அதே 2019-ம் ஆண்டில் அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவின் பிராண்ட் மதிப்பு 23.9 மில்லியனாக அதிகரித்து இருக்கிறதாம். மனைவியை விட 10 மடங்கு அதிகம் பிராண்ட் மதிப்பு இருக்கு பாருங்களேன்.

மற்றவர்களுக்கு இடம் இல்லை

மற்றவர்களுக்கு இடம் இல்லை

Duff & Phelps' celebrity brand valuation report-ல், கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளைத் தவிர வேறு ஒருவருக்கும் இடம் இல்லை என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்தியா முழுக்க பிரபலமான, கிரிக்கெட்டின் மிதாலி ராஜ், டென்னிஸின் சானியா மிர்ஸா, பேட்மிண்டனின் சிந்து என யாருமே இடம் பிடிக்கவில்லை. இன்னும் இந்தியாவில் கிரிக்கெட்டும், சினிமாவும் தான் பெரிய சக்திகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

most valuable celebrity brand list virat kohli tops

Duff & Phelps’ celebrity brand valuation report says that the cricket and Bollywood is the most dominating medium in india. All the high brand value celebrities are cricketers and Bollywood stars only.
Story first published: Thursday, February 6, 2020, 16:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X