அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு இப்படியும் பரிசு கொடுக்கலாம்.. இதோ சூப்பர் ஐடியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னதான் நம்மை சுற்றி ஆயிரமாயிரம் பந்தங்கள் இருந்தாலும், என்றுமே அம்மா என்றொரு உறவு ஸ்பெஷல் தான். சொல்லப்போனால் அன்பின் உருவகமாக, நற்பண்புகளுக்கு எடுத்துக் காட்டாக, மொத்தத்தில் எல்லோருக்கும் பிடித்தமான உறவு அம்மா தான். அப்படிப்பட்ட அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

 

மே 3 அட்சய திருதியை: தங்கம் வாங்க இதுதான் 'நல்ல; நேரம்..!

இப்படிப்பட்ட அன்னைகளுக்கு நிதி ரீதியாக சுதந்திரமாக வாழ அவர்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ்

பொதுவாக வயதான காலகட்டத்தில் பலருக்கும் சந்திக்கும் ஒரு பிரச்சனை உடல் நலத்தில் தான். அது மிகப்பெரிய அளவில் எனும் போது, அவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மிகச்சரியான சாய்ஸ் ஆக இருக்கும். இது அவர்களின் உடல் நலத்தினையும் பேணி காக்க உதவிகரமாக இருக்கும். அதேசமயம் இன்சூரன்ஸ் உள்ளதால் நிதி ரீதியாகவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

 மியூச்சுவல்  ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளை தொடங்கிக் கொடுக்கலாம். இது மொத்தமாக முதலீடு செய்தோ அல்லது மாத மாதம் எஸ்ஐபி-யிலும் கூட முதலீடு செய்யலாம். இதில் உங்களது முதலீடு வளர்ச்சி காண உதவும். இது அவர்களின் ஓய்வுகாலத்திற்கு பயனளிக்கும். மொத்தத்தில் நிதி ரீதியாக பாதுகாப்பளிக்கும்.

சிறு தொழில் செய்ய நிதியளிக்கலாம்
 

சிறு தொழில் செய்ய நிதியளிக்கலாம்

நம்மில் பலரின் குடும்பத்திலும் இது நடந்திருக்கலாம். அவர்களுக்கென சொந்தமாக ஒரு சிறு தொழில் செய்ய ஆர்வம் இருக்கலாம். அதற்காக நிதியளிக்கலாம். உதாரணத்திற்கு வீட்டில் இருந்தே சமையல் ஆர்டர்களை செய்ய நினைக்கலாம். குழந்தைகளுக்கு வகுப்புகள், கிராப்ட் ஐடியாக்கள், கடைகள் என அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டமிடலாம்.

மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம்

இன்றைய காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு என சிறப்பான சில திட்டங்கள் உள்ளன. குறிப்பாக SCSS போன்ற சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபகரமானதாக இருக்கும், இது வங்கி டெபாசிட்டுகளை விட அதிக லாபகரமானதாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி வட்டு விகிதம் 7.4% ஆகும். இது ஐந்து வருடங்களுக்கு நிரந்தர வருமானத்தினை தரும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

பிடித்த இடங்களுக்கு கூட்டிச் செல்லலாம்

பிடித்த இடங்களுக்கு கூட்டிச் செல்லலாம்

பொதுவாக குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆக ஏதேனும் ஒரு நாள் அவர்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு கூட்டி செல்லலாம். உதாரணத்திற்கு அவர்களுக்கு பிடித்தமான உணவகங்களுக்கு கூட்டி சென்று, பிடித்தமான உணவினை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அவருக்கு பிடித்தமான நீண்டதூர சுற்றுலா தலங்களுக்கு டிக்கெட் புக் செய்து, பரிசாக கொடுக்கலாம்.

டிரஸ்ட்-களுக்கு உதவி செய்யலாம்

டிரஸ்ட்-களுக்கு உதவி செய்யலாம்

தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யலாம். குறிப்பாக அறக்கட்டளைகள் மூலம் உதவி செய்யலாம். இதன் மூலம் அவர்கள் மன ரீதியாக மிக சந்தோஷமடையலாம். உங்களால் பணம் கொடுக்க முடியாவிட்டாலும், பணம் திரட்ட உதவி செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mother's day 2022: gift your mother financial independence this mother's day

mother's day 2022: gift your mother financial independence this mother's day/அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு இப்படியும் பரிசு கொடுக்கலாம்.. இதோ சூப்பர் ஐடியா!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X