உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக இருந்து வரும் பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பேஸ்புக்கின் பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு பிரபலமான டிக்டாக், யூடியூப் சேனல்களே காரணம்.
மேலும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதார்கள் செலவினை குறைத்துள்ளனர். இதன் காரணமாக நிறுவனத்தின் வருவாய் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளது.
பட்ஜெட்டில் அம்பானி, அதானிக்கு கிடைத்த ஜாக்பாட்.. குறைந்த வட்டியில் கடன்..!

பங்கு விலை சரிவு
இதற்கிடையில் தான் இப்பங்கில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதனால் அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்கு பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது 26.39% குறைந்து 237.76 டாலர்களாக குறைந்துள்ளது.

சந்தை மதிப்பு மோசமான சரிவு
இந்தளவுக்கு மோசமான அளவு பங்கு விலையானது சரிவினைக் கண்டுள்ள நிலையில் மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 251 பில்லியன் டாலர் சரிவினைக் கண்டுள்ளது. இது நியூசிலாந்தின் பொருளாதார அளவுக்கு சமமானதாகும். ஒரு நாளில் மிகப்பெரிய சரிவினை கண்டுள்ள நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பினை 85 பில்லியன் டாலர் குறைத்துள்ளது.

அதானி, அம்பானியை விட கீழே
ஜுக்கர்பெக் சுமார் 12.8% பங்கினை மெட்டா நிறுவனத்தில் வைத்துள்ளார். மெட்டா நிறுவனம் 4வது காலாண்டில் 33.67 பில்லியன் டாலர் டர்ன் ஓவர் செய்துள்ள நிலையில், நிகர லாபம் 10.3 பில்ல்லியன் டாலராக இருந்தது. போர்ப்ஸ் லிஸ்டி ன் ரியல் டைம் பில்லியனர் அறிக்கையின் இந்த மோசமான வீழ்ச்சிக்கு மத்தியில் தான் ,இந்தியாவின் பில்லியனர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானியை விட, மார்க் கீழே சென்றுள்ளார்.

12-வது இடம் தான்
தற்போது கெளதம் அதானியின் நிகர மதிப்பு சுமார் 90 பில்லியன் டாலராகும். இவர் தற்போது 10வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய பில்லியனரான முகேஷ் அம்பானி 11வது இடத்தில் 89 பில்லியன் டாலருடன் உள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது 12 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

உதய் கோடக் கருத்து
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதய் கோடக், பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 240 பில்லியன் டாலர்(18 லட்சம் கோடி ரூபாய் ஒரே நாளில் சரிவினைக் கண்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தின் மொத்த மதிப்பினை விட அதிகம். இது காலத்தின் பலவீனம் மற்றும் நிலையதற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. எப்போதும் இயல்பான உலகத்திற்கு வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.