முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்: எலக்ட்ரிக் வாகனங்களின் விலை இனி பெரிய அளவில் குறையும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் ஸ்மார்ட்போன் முதல் டெஸ்லா கார் வரையில் அனைத்து எலக்ட்ரிக் கருவிகளிலும் 99 சதவீதம் வரையில் பயன்படுத்தும் முக்கியமான பொருள் லித்தியம் அயன் பேட்டரி தான்.

 

குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் அதிகச் செலவுகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான விஷயமும் பேட்டரி தான், லித்தியம் ஐயன் பேட்டரி தயாரிப்பதற்கான உற்பத்தி பொருள் தட்டுப்பாடு, விலை ஆகிய அனைத்தும் அதிகம் என்பதால் பேட்டரி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி யாரும் எதிர்பார்க்காத வகையில் முக்கியமான முடிவை எடுத்து டெஸ்லா உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களையும் தன்னைத் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

முகேஷ் அம்பானியை முந்திய சீன தொழிலதிபர்.. யாரு சாமி நீ..! சொத்து மதிப்பு எவ்வளவு..?!

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

சமீபத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கிளீன் எனர்ஜி பிரிவு நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த Faradion என்னும் சோடியம் பேட்டரி தயாரிப்பு நிறுவனத்தைச் சுமார் 100 மில்லியன் பவுண்ட்-க்கு வாங்கியது.

 Faradion நிறுவனம்

Faradion நிறுவனம்

இது முகேஷ் அம்பானியின் ஜிகாபேக்ட்ரி கனவை நினைவாக்க முதலும் முக்கியமான படியாக இருப்பது மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் 100% எலக்ட்ரிக் கனவை நினைவாக்க இந்தச் சோடியம் பேட்டரி நிறுவனமான Faradion-ன் தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இருப்பு அளவு
 

இருப்பு அளவு

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த மக்களும் அரசும் முடிவெடுத்துள்ள நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை தயாரிக்கும் லித்தியம், உயர் தர நிக்கல், கோபால்ட் மற்றும் இதர முக்கியமான உலோகங்களின் இருப்பு அளவு தொடர்ந்து வேகமாகக் குறைந்து வருகிறது.

 100% எலக்ட்ரிக் வாகனங்கள்

100% எலக்ட்ரிக் வாகனங்கள்

இது மட்டும் அல்லாமல் இதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் 100% எலக்ட்ரிக் வாகனங்கள் என்ற திட்டம் சாத்தியப்படாமல் போகும். ஆனால் முகேஷ் அம்பானி கைப்பற்றியுள்ள Faradion நிறுவனத்தின் பேட்டரி தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் சோடியம் பூமியில் லித்தியம் உலோகத்தை விடவும் 300 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

 லித்தியம் ஐயன் பேட்டரி

லித்தியம் ஐயன் பேட்டரி

தற்போதைய கணிப்பின் படி 2030க்குள் லித்தியம் ஐயன் பேட்டரி தயாரிக்கத் தேவையான உலோகங்களின் டிமாண்ட் 5 மடங்கு அதிகரிக்கும், இதேபோல் 2022ல் வரலாற்றிலேயே லித்தியம் ஐயன் பேட்டரி விலை அதிகமாக உள்ளது.

சோடியம் பேட்டரி முக்கியத்துவம்

சோடியம் பேட்டரி முக்கியத்துவம்

இத்தகைய சூழ்நிலையில் சோடியம் பேட்டரி போன்ற மாற்று உலோக பேட்டரி முக்கியமானதாக உள்ளது. ஆனால் தற்போது சந்தையில் இருக்கும் சோடியம் பேட்டரிக்கும், லித்தியம் ஐயன் பேட்டரிக்கு மத்தியிலான திறன் வித்தியாசம், எனர்ஜி சேமிப்பு வித்தியாசம் பெரிய அளவில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani: Big bet on sodium batteries than lithium ion; Do you know Why?

Mukesh Ambani: Big bet on sodium batteries than lithium ion; Do you know Why? முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்: எலக்ட்ரிக் வாகனங்களின் விலை இனி பெரிய அளவில் குறையும்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X