முகேஷ் அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு.. காரணம் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முதல் டெலிகாம், ரீடைல் எனப் பல துறையில் வர்த்தகம் செய்தும் வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 2020ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பங்கு விற்பனை மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டினார்.

Recommended Video

Mukesh Ambani வெளியேற்றம்.. World Top 10 பணக்காரர்கள் List-ல் பின்னடைவு | Oneindia Tamil

இதன் மூலம் ரிலையன்ஸ் பங்குகள் வரலாறு காணாத உச்சத்திற்குச் சென்று முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகப்படியாக 2020ஆம் ஆண்டில் 88.4 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு வரை முன்னேறினார் முகேஷ் அம்பானி.

ஆனால் தற்போது நிலைமையே வேற..!

சிங்க பாதையில் பிட்காயின்.. கிறிஸ்துமஸ் நாளில் புதிய உச்சம்.. 24,626 டாலர்..!சிங்க பாதையில் பிட்காயின்.. கிறிஸ்துமஸ் நாளில் புதிய உச்சம்.. 24,626 டாலர்..!

 ஓரே இந்தியர்

ஓரே இந்தியர்

2020ஆம் ஆண்டு முடியும் நேரத்தில் முகேஷ் அம்பானி டாப் 10 பட்டியில் இருந்து ஓரே இந்தியர் வெளியேற்றப்பட்டு உள்ளார். முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியதிற்கும், தற்போது டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டத்திற்கும் ஓரே காரணம் என்பது தான் குறிப்பிடத்தக்கது.

 பியூச்சர் குரூப் நிறுவன ஒப்பந்தம்

பியூச்சர் குரூப் நிறுவன ஒப்பந்தம்

முகேஷ் அம்பானி தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பியூச்சர் குரூப் நிறுவனத்தைச் சுமார் 24,713 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்பு தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2,309 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் அமேசான் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர குருப் ஒப்பந்தத்திற்குத் தடை அறிவிக்கச் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் உத்தரவு பெற்றது.

 முதலீட்டாளர்கள் நம்பிக்கை

முதலீட்டாளர்கள் நம்பிக்கை

இதன் பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சில பல வர்த்தக விரிவாக்கம், முதலீடுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டும் முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் நம்பிக்கையைப் பெறவில்லை. இதன் வாயிலாக 2020 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தனது உச்ச விலையில் இருந்து சுமார் 16 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 சொத்து மதிப்புச் சரிவு

சொத்து மதிப்புச் சரிவு

இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 88.4 பில்லியன் டாலரில் இருந்து 76.5 பில்லியன் டாலர் வரையில் குறைந்து உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

 உலகப் பணக்காரர்கள் பட்டியல்

உலகப் பணக்காரர்கள் பட்டியல்

தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் ஜெப் பிசோஸ், எலான் மஸ்க், பில் கேட்ஸ் ஆகியோர் இருக்கும் நிலையில், 9வது மற்றும் 10வது இடத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவரான லேரி எலிசன் மற்றும் கூகிள் நிறுவனத்தின் நிறுவனர் செர்ஜி பிரின் ஆகியோர் உள்ளனர்.

 முகேஷ் அம்பானியின் நிலை

முகேஷ் அம்பானியின் நிலை

இதன் வாயிலாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த வருடம் 33 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், உச்ச அளவான 88.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் இருந்து தற்போது 76.5 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியிலில் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani listed out from world top 10 richest billionaires list

Mukesh Ambani listed out from world top 10 richest billionaires list
Story first published: Friday, December 25, 2020, 19:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X