இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி ஜியோ சேவை மூலம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஜியோ நிறுவனத்தை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்யப் பல மாதங்களாகத் திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே இதற்கான முயற்சியைச் செய்து ஒரு முறை தோல்வி அடைந்த நிலையில் தற்போது புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
தொடர் சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்று எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன!
இந்தியாவில் மிகப்பெரிய டெலிகாம் சேவையாக விளங்கும் ஜியோ நிறுவனத்தைப் பிரிட்டனா நாட்டிற்ரு விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.

பிரிட்டிஷ் டெலிகாம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் டெலிகாம் சேவை பிரிவான ஜியோ சேவை வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது பிரிட்டன் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான BT (பிரிட்டிஷ் டெலிகாம்)-ல் பெரிய அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

டி-மொபைல் நெதர்லாந்து
ஆகஸ்ட் மாதம் ஜெர்மன் நாட்டின் Bonn நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டாய்ச் டெலிகாம் நிறுவனத்தின் நெதர்லாந்து வர்த்தகமான டி-மொபைல் நெதர்லாந்து நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க முயற்சி செய்து Apax பார்ட்னர்ஸ் மற்றும் வார்பர்க் பின்கஸ் நிறுவனத்துடனான போட்டியில் தோற்றுப்போனது.

முகேஷ் அம்பானி ஸ்டோக் பார்க்
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் 57 மில்லியன் பவுண்ட் தொகைக்குப் பிரம்மாண்டமான ஸ்டோக் பார்க் 5 நட்சத்திர ஹோட்டலை வாங்கித் தனது சொந்த வீடாக மாற்றி வருகிறார். இதுமட்டும் அல்லாமல் அம்பானி குடும்பம் மொத்தமாகப் பிரிட்டன் நாட்டில் குடியேறப்போவதாகக் கூறப்பட்ட நிலை மறுப்பு தெரிவித்தார்.

419 நிறுவன முதலீட்டாளர்கள்
இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் தனது ஜியோ சேவையை விரிவாக்கம் செய்யும் விதமாக BT நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. BT நிறுவனப் பங்குகளைச் சுமார் 419 நிறுவன முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்.

ரிலையன்ஸ் வாங்கத் தயார்
இந்தப் பங்குகளைச் சரியான விலைக்குக் கொடுத்தால் கட்டாயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கத் தயார் என்ற அறிவிப்பு BT நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பங்கு கைப்பற்றல் மூலம் BT நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சி செய்கிறது.

கூட்டணி
இந்தப் பங்கு கைப்பற்றல் தோல்வி அடையும் பட்சத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் BT நிறுவனத்தின் விரிவாக்க பணிகளில் கூட்டணி வைக்கவும் அல்லது முதலீடு செய்யவும் தயார் எனவும் கூறியுள்ளதாகவும், இரு தரப்புக்கு மத்தியில் இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.

40 சதவீத மக்கள் தொகை
பிரிட்டன் நாட்டின் 40 சதவீத மக்கள் தொகை BT நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 30 மில்லியன் ரீடைல் வாடிக்கையாளர்களையும், 1 மில்லியன் நிறுவன வாடிக்கையாளர்களையும் பிரிட்டன் நாட்டில் வைத்துள்ளது BT நிறுவனம். இன்று BT குரூப்-ன் மொத்த மதிப்பு 20.63 பில்லியன் டாலராக உள்ளது.