அம்பானியின் ஜியோ தான் டாப்பு! TRAI கணக்கு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி கை வைத்த வியாபாரம் எல்லாமே, தூள் கிளப்பிக் கொண்டு இருக்கிறது.

 

கடந்த 2016-ம் ஆண்டு, தடாலடியாக ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவையை ஆரம்பித்த முகேஷ் அம்பானி, இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக 400 மில்லியனுக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்ட, மிகப் பெரிய கம்பெனியாக வலம் வரத் தொடங்கி இருக்கிறது.

400 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் ஒரு விஷயத்திலும் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது. அது என்ன வாருங்கள் பார்ப்போம்.

அனில் அம்பானியின் எரிக்சன் வழக்கு.. தம்பிக்கு நிதி ரீதியாக முகேஷ் அம்பானி உதவவில்லை..!

 இணையம்

இணையம்

வெறுமனே வாடிக்கையாளர்களை வைத்திருந்தால் போதாது. மற்ற சேவைகளும் வேண்டுமே? குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் இணைய சேவைகள் வேண்டுமே? அப்போது தானே வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். இந்த இணைய சேவையிலும் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது.

19.3 எம் பி பி எஸ் வேகம்

19.3 எம் பி பி எஸ் வேகம்

ரிலையன்ஸ் ஜியோ மொபைல் இணையத்தின் சராசரி பதிவிறக்க (டவுன்லோட்) வேகம் 19.3 எம் பி பி எஸ் ஆக பதிவாகி இருக்கிறது என்கிறது, இந்திய டெலிகாம் துறையை நெறிமுறைப்படுத்தும் டிராய் அமைப்பு. ஆகஸ்ட் 2020 காலத்தில் 15.9 எம் பி பி எஸ் ஆக பதிவாகி இருந்த இணைய வேகம், செப்டம்பரில் 21 % அதிகரித்து 19.3 எம் பி பி எஸ்-ஆக அதிகரித்து இருக்கிறதாம்.

7.5 எம் பி பி எஸ் வேகத்தில் ஏர்டெல்
 

7.5 எம் பி பி எஸ் வேகத்தில் ஏர்டெல்

பார்தி ஏர்டெல்லின் சராசரி மொபைல் இணைய பதிவிறக்க வேகம், ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த 19.3 எம் பி பி எஸ் வேகத்தில் பாதியைக் கூடத் தொடவில்லை. 7.5 எம் பி பி எஸ் தான் ஏர்டெல்லின் பதிவிறக்க வேகமாக இருக்கிறதாம். ஆகஸ்ட் 2020 மாதத்தில் ஏர்டெல்லின் டவுன்லோட் வேகம் 7 எம் பி பி எஸ் ஆக இருந்து தற்போது 0.5 எம் பி பி எஸ் அதிகரித்து இருப்பது இங்கு குறிப்பிடத்தகக்து.

வொடாபோன் டாப்பு

வொடாபோன் டாப்பு

மொபைல் பதிவேற்றம் (அப்லோட்) வேகத்தில், ரிலையன்ஸ் ஜியோவோ அல்லது பார்தி ஏர்டெல்லோ முதல் இடத்தில் இல்லை. ஆச்சர்யமாக, வொடாபோன் (வொடாபோன் ஐடியா அல்ல) 6.5 எம் பி பி எஸ் வேகத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஐடியா 6.4 எம் பி பி எஸ் வேகத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. பார்தி ஏர்டெல் & ரிலையன்ஸ் ஜியோ 3.5 எம் பி பி எஸ் பதிவேற்ற வேகத்துடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள் என்கிறது டிராய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani reliance Jio fastest mobile network with 19.3 mbps download speed

The Mukesh ambani managing Reliance Jio is the fastest mobile network with 19.3 MBPS download speed as per TRAI report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X