இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானி அமெரிக்காவில் மிகப்பெரிய சொகுசு ஹோட்டலான மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37% பங்குகளை வாங்கவுள்ளார்.
இதன் இன்றைய மதிப்பு 98.15 மில்லியன் டாலராகும். இதன் இன்றைய மதிப்பு சுமார் 729 கோடி ரூபாய்க்கு மேலாகும்.
இந்த மாண்டரின் ஹோட்டல் அமெரிக்காவின் மிகப்பெரிய பிரீமியம் சொகுசு ஹோட்டலில் ஒன்றாகும். இந்த ஹோட்டலின் முக்கால் வாசி பங்கினைத் தான் தற்போது முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. RBIன் சூப்பர் அறிவிப்பு.. ரெடியாகிக்கோங்க..!

வருவாய் விகிதம்
அமெரிக்காவின் சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான இது மிகப்பெரிய சிட்டியான இது நியூயார்க்கில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் 2018ம் ஆண்டு வருமானம் 115 மில்லியன் டாலராகும். இதே 2019ல் 113 மில்லியன் டாலராகும். இதே 2020ல் 15 மில்லியன் டாலர் வருவாயினையும் ஈட்டியுள்ளது. இது கொரோனா காரணமாக குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் நல்லதொரு வருவாய் கொடுக்கும் ஹோட்டலாகவும் இருக்கலாம்.

யார் விற்பனை?
கேமன் தீவில் உள்ள கொலம்பஸ் செண்டர் கார்ப்பரேஷனின் முழு பங்கு மூலதனத்தினையும், ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்காக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாக பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து விரிவாக்கம்
ரிலையன்ஸ் குழுமத்தின் இந்த கையகப்படுத்தலானது ஹாஸ்பிட்டாலிட்டி வணிகத்தினை விரிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.
முன்னதாக மும்பை பாந்திராவில் மிகபெரிய ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ச்சியாக சர்வதேச அளவில் தனது ஹாஸ்பிட்டாலிட்டி வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார் முகேஷ் அம்பானி.

மாண்டரின் ஓரியண்டல்
நியூயார்க்-கில் அமைந்துள்ள இந்த சொகுசு ஹோட்டலான இது, மத்திய பூங்கா அருகிலேயே உள்ளது. அதோடு நல்ல வருவாயினை ஈட்டும் மிகப்பெரிய ஹோட்டலாகவும் உள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டலானது, உலகளாவிய அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. பல விருதுகளையும் வென்றுள்ளதாகவும் ரிலையன்ஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பங்கு விலை
கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கிட்டதட்ட 1% அதிகரித்து, 2436 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 2458.05 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 2411.55 ரூபாயாகவும் உள்ளது.
இதன் 52 வார உச்ச விலை 2751.35 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1830 ரூபாயாகும்.