அம்பானியை மிஞ்சிய அதானி.. ஒரு நாளைக்கு ரூ.1002 கோடி வருவாய்.. டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹூரூன் இந்தியா 2021ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

இதில் நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வழக்கம்போல முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் மற்றொரு பில்லியனர் ஆன கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார். சரி இவர்களின் சொத்து மதிப்பு என்ன? அடுத்தடுத்த இடங்களில் யார் யார் உள்ளனர் வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..!

டாப் லெவலில் முகேஷ் அம்பானி

டாப் லெவலில் முகேஷ் அம்பானி

நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 7,18,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வழக்கப்போல முகேஷ் அம்பானியின் குடும்பமே இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இவரின் தினசரி வருமானம் 163 கோடி ரூபாயாகும். முந்தைய ஆண்டினை காட்டிலும் 9% சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

ஜெட் வேகத்தில் கவுதம் அதானி

ஜெட் வேகத்தில் கவுதம் அதானி

இந்த பட்டியலில் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வரும் மற்றொரு பில்லியனர் ஆன, கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது, பலமடங்கு அதிகரித்து, 5,05,900 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,40,200 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை நாள் கணக்கில் கணக்கிட்டு பார்த்தால், அதானியின் வருமானம் ஒரு நாளை 1002 கோடி ரூபாயாகும். இவரின் சொத்து மதிப்பு 261% அதிகரித்துள்ளது.

8ம் இடத்தில் அதானியின் சகோதரர்
 

8ம் இடத்தில் அதானியின் சகோதரர்

இதில் கவனம் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், கவுதம் அதானியின், சகோதரரான வினோத் அதானியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். வினோத் அதானியின் சொத்து மதிப்பானது மூன்று மடங்கு அதிகரித்து, 1,31,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவர் இந்த டாப் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளார்.

மூன்றாம் இடத்தில் ஷிவ் நாடார்

மூன்றாம் இடத்தில் ஷிவ் நாடார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹெச் சி எல் குடும்பத்தின் தலைவரான ஷிவ் நாடார் & குடும்பத்தினர் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரர்களாக உள்ளனர். இவர்களுடைய சொத்து மதிப்பு 2,36,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 76 வயதான ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு, முந்தைய ஆண்டினை காட்டிலும் 67% அதிகரித்துள்ளது. இவர்களின் தினசரி வருமானம் 260 கோடி ரூபாயாகும்.

ஹிந்துஜா குழுமம்

ஹிந்துஜா குழுமம்

இதில் நான்காவது இடத்தில் லண்டனைத் தளமாகக் கொண்ட, ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ் பி ஹிந்துஜா & குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பானது இரண்டு இடங்கள் வீழ்ச்சி கண்டு, இரண்டாம் இடத்தில் இருந்து, 2,20,000 கோடி ரூபாயாக உள்ளது. இவர்களின் தினசரி வருமானம் 209 கோடி ரூபாயாகும். எப்படியிருப்பினும் முந்தைய ஆண்டினை காட்டிலும் சொத்து மதிப்பு 53% அதிகரித்துள்ளது.

லட்சுமி மிட்டல் குழுமம்

லட்சுமி மிட்டல் குழுமம்

5வது இடத்தில் பிரபல தொழிலதிபரான லட்சுமி மிட்டல் குழுமம் & குடும்பத்தினரும் இடம் பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1,74,400 கோடி ரூபாயாகும். இவர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை காட்டிலும் 187% அதிகரித்துள்ளது.

அடுத்த இடத்தில் சைரஸ் மிஸ்திரி

அடுத்த இடத்தில் சைரஸ் மிஸ்திரி

தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனவல்லாவின் சொத்து மதிப்பானது, அதே ஆறாவது இடத்தில் உள்ளது. இவரின் சொத்து மதிப்பு 1,63,000 கோடி ரூபாயாகும்.

இதே ஏழாவது இடத்தில் அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமனி, 1,54,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார்.

குமார் மங்கலம் பிர்லா & ஜெய் சவுத்ரி

குமார் மங்கலம் பிர்லா & ஜெய் சவுத்ரி

இதே ஒன்பதாவது இடத்தில் ஆதித்யா பிர்லா குடும்பத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா 1,22,200 கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும், 10வது இடத்தில் ஜெய் சவுத்ரி (Zscaler) 1,21,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார்.

மொத்தத்தில் இந்த கொரோனா காலத்திலும் இவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக அதானியின் சொத்து மதிப்பு ஒரு நாளைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani tops Harun India Rich List: adani & family made Rs.1002 crore per day

Mukesh ambani tops Harun India Rich List 2021: adani & family made Rs.1002 crore per day, ambani made Rs.163 crore per day
Story first published: Thursday, September 30, 2021, 19:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X