900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் முகேஷ் அம்பானி 79 மில்லியன் டாலர் மதிப்பில். இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கியுள்ளது.

 

இது வெறும் வணிகம் மட்டும் அல்ல, வரலாறு. 900 வருட வரலாற்று பாரம்பரியம் மிக்க ஒரு இடமாகும். இது ஒரு வரலாற்று சின்னமாகவும் கருதப்படுகிறது.

இது சிறந்த சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு மட்டும் அல்ல, சிறந்த விளையாட்டு துறை வசதிகளையும் கொண்டுள்ளதாம். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 590 கோடி ரூபாய்க்கு மேல். இத்தனை கோடிகள் கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த ஹோட்டலில் என்ன சிறப்பம்சம், வாருங்கள் பார்க்கலாம்.

என்னென்ன வசதிகள்?

என்னென்ன வசதிகள்?

இங்கிலாந்தில் உள்ள இந்த ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த, ஹோட்டலில் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டுள்ளதாம். 900 வருட வரலாற்றினை கொண்டு இருந்தாலும், இது 1908 வரையில் ஒரு தனியார் வீடாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஹோட்டலில் 49 சொகுசு படுக்கையறைகள் மற்றும் suite அறைகள் உள்ளன.

விளையாட்டு மைதானம்

விளையாட்டு மைதானம்

இது தவிர 27 துளையுள்ள கோல்ப் மைதானத்தினையும் கொண்டுள்ளது. 14 டென்னிஸ் கோர்ட், 14 ஏக்கரில் தனியார் கார்டன்கள் உள்ளதாம். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது. அம்பானியின் சொத்து மதிப்பானது 71.5 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், உலகின் 13ஆவது பணக்காரராக உள்ளார்.

வெற்றிகரமான வணிகங்கள்
 

வெற்றிகரமான வணிகங்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பாரம்பரியம் மிக்க தளத்தில் விளையாட்டு தளம் மட்டும் ஓய்வு வசதிகளை மேம்படுத்தும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே சில்லறை வணிகம், டிஜிட்டல் வணிகம், எண்ணெய் வணிகம் மற்றும் தொலைத் தொடர்பு துறை, உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு துறை என பல வற்றிலும் கோலேச்சி வரும ரிலையன்ஸ், இதன் மூலம் ஹோட்டல் வணிகத்தில் இன்னொரு படி மேலே செல்ல இது வழிவகுக்கும்.

வணிக விரிவாக்கமா?

வணிக விரிவாக்கமா?

எப்படியிருப்பினும் இது குறித்த முழுமையான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த கையகப்படுத்தலானது Reliance's consumer and hospitality assets கீழ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவரை பெரும் அளவில் தனது வணிகத்தில் கோலோச்சி வந்த முகேஷ் அம்பானி, தற்போது அண்டை நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Muksh ambani buys UK’s iconic stoke park for $79 million

Mukesh ambani updates.. Muksh ambani buys UK’s iconic stoke park for $79 million
Story first published: Friday, April 23, 2021, 12:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X