3 அவித்த முட்டைக்கு ரூ.1,672 பில்-லா.. கடுப்பில் இசை அமைப்பாளர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஹமதாபாத் : என்னதான ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக இருந்தாலும் மூன்று முட்டைக்கு 1,350 ரூபாய் பில் என்றால் கொஞ்சம் பகீர் என்று தான் உள்ளது.

 

மூன்று அவித்த முட்டைகளுக்கு குஜராத்தை சேர்ந்த நட்சத்திர ஹோட்டலான ஹையத் ரீஜென்சி 1,672 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக ரசீதுடன் இசை அமைப்பாளர் சேகர் ராவிஜயானி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் சண்டிகாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 2 வாழைப்பழங்களுக்கு 442.50 ரூபாய் பில் கொடுக்கப்பட்டதாக, நடிகர் ராகுல் போஸ் டுவீட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலானது.

வாழைப்பழ பில் போய் முட்டை பில் வந்துள்ளது

வாழைப்பழ பில் போய் முட்டை பில் வந்துள்ளது

இந்த நிலையில் தற்போது வழைப்பழம் போய் முட்டை வைரலாக ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் பிரபல இசையமைப்பாளரான சேகர் ராவிஜயானிக்கும், இதே போன்ற மற்றொரு அதிர்ச்சி தரும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் ஹையாத் ரீஜென்சி 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் சேகர் ராவிஜயானி.

மூனு முட்டைக்கு ஜிஎஸ்டி சுமார் ரூ.300

மூனு முட்டைக்கு ஜிஎஸ்டி சுமார் ரூ.300

அவர் அங்கு தங்கியிருந்த சமயத்தில் சாப்பிட்ட 3 அவித்த முட்டைகளுக்கு ரூ.1350 கட்டணம் என்றும், இதற்காக ஜிஎஸ்டி கட்டணமாக 255 ரூபாயும், இதற்கு சேவை கட்டணமாக 67.50 ரூபாயும், ஆக மொத்தம் 1672 ரூபாய்க்கு ரசீது வழங்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. என்ன கொடுமை சார் இது மூனு முட்டைக்கு 1,350 பில் போட்டதே அதிகம். இதில் ஜிஎஸ்டி 250 ரூபாய், இதுல என்ன சர்வீஸ் சார்ஜ் 67 ரூபாய் தான் தெரியலயே.

தயவு செய்து இதை பற்றி பேசாதீங்க
 

தயவு செய்து இதை பற்றி பேசாதீங்க

இதற்கான ரசீதை தான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, மூன்று முட்டைகளுக்கு இவ்வளவு கட்டணமா?" என இசை அமைப்பாளர் ராவிஜயானி கேள்வி எழுப்பியுள்ளார். அட போங்க, மூன்று முட்டைக்கு 1650 ரூபாய் மனுசன் பனம் கொடுத்திருக்கார். பின்னர் அவர போய் அடிக்கடி இப்படிகேட்டுக்கிட்டே இருந்தா கடுப்பாக மாட்டாரா? தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பற்றி பல தகவலகள் டிவிட்டரில் பரவி வரும் நிலையில், நான் இதை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. யாரும் என்னிடத்தில் இதை பற்றி கேட்க வேண்டாம் என்றும் சேகர் தெரிவித்துள்ளாராம்.

தக்க நடவடிக்கை இருக்குமா?

தக்க நடவடிக்கை இருக்குமா?

ஏற்கனவே ராகுல் போஸின் வீடியோவை பர்த்த கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையம் இந்த வரிவிதிப்பு பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த நிகழ்விலும் அப்படி ஒரு விசாரணை நடைபெறுமா? என்றும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது சகஜம் தான் பாஸ்

இது சகஜம் தான் பாஸ்

சில இது போன்ற உயர்தர ஸ்டார் ஹோட்டல்களில் இது சகஜம் என்றும், சிலர் கிண்டலாகவும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இணையத்தில் மிகவேகமாக வைரலாகி வரும் இந்த ட்விட்டை பற்றிய உங்களது கருத்து. இந்த விலை சாதகமானதா? இது சரியான விலைதானா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: egg
English summary

Music director shocked when he was charged to Rs.1,672 for just 3 boiled eggs

Music director shocked when he was charged to Rs.1,672 for just 3 boiled eggs, He tweet 'that was an Eggxorbitant meal' .
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X