எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம் முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் உற்பத்தியில் பல சிக்கல்கள் இருப்பது மட்டும் அல்லாமல் போதிய கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாமல் இருப்பதால் வர்த்தகப் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.
இந்த இடைவேளையை உணர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்குவது மட்டும் அல்லாமல், இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதற்காக இன்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.
ஒரு வருடம் வெயிட் பண்ணுங்க.. பெட்ரோல் கார் விலையில் எலக்ட்ரிக் கார் கிடைக்கும்..!

நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று பாக்ஸ்கான் தலைவர் யங் லியு-வை சந்தித்து, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்தார் மோடி தெரிவித்தார்.

மோடி டிவீட்
"Foxconn இன் தலைவரான திரு யங் லியுவை சந்திப்பதில் மகிழ்ச்சி. செமிகண்டக்டர்கள் உட்பட இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கான அவர்களின் திட்டங்களை நான் வரவேற்கிறேன்" என்று மோடி தனது டிவிட்டரிலும் கூறினார்.

எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டம் மூலம் இந்தியாவின் நெட் ஜீரோ இலக்கை அடைய முடியும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பில் பாக்ஸ்கான் தலைவர் யங் லியு கூறியுள்ளார்.

தைவான் நாட்டின் பாக்ஸ்கான்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிக்கப் பல தொழிற்சாலைகளை வைத்துள்ள நிலையில் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.

பேட்டரி தொழிற்சாலை
பாக்ஸ்கான் ஜூன் 15ஆம் தேதி தனது முதல் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையைத் தைவான் நாட்டின் Kaohsiung பகுதியில் துவங்கியது. வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா தொடர்ந்து இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் சொந்தமாகப் பேட்டரி தொழிற்சாலையைத் துவங்கியது நம்பிக்கை அளிக்கிறது.
அனில் அகர்வால் அடுத்த திட்டம்.. பாக்ஸ்கான் உடன் கூட்டணி.. மோடி அரசின் கனவு நிறைவேறுகிறது!!