கொரோனா பாதிப்பால் 13,000 நிறுவனங்கள் முடங்கியது.. அதிர்ச்சி தகவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்று பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கியது, பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாகச் சீர்குலைத்தது. இந்த வரிசையில் தற்போது கொரோனா தொற்று மூலம் மார்ச் 31 வரை முடிந்த நிதியாண்டில் சுமார் 12,889 நிறுவனங்கள் முடங்கியுள்ளது, 87 நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது.

 

கடந்த நிதியாண்டில் கொரோனா தொற்றை முறையாகக் கட்டுப்படுத்தாத காரணத்தால் குறுகிய காலகட்டத்தில் அதிகளவிலான பாதிப்புகளை மக்கள், வர்த்தகம், சுகாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் ஏற்பட்டது.

 13,000 நிறுவனங்கள் முடக்கம்..!

13,000 நிறுவனங்கள் முடக்கம்..!

இந்நிலையில் ராஜிய சபாவில் கார்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் மார்ச் 31, 2021 உடன் முடிந்த நிதியாண்டில் சுமார் 12,889 நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகமும், பணிகளும் செய்யாமல் முடங்கியுள்ளது. இதேபோல் 87 நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது.

 2018 முதல்

2018 முதல்

இதன் மூலம் 2018 முதல் ஜூன் 2021 வரையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சுமார் 2,38,223 நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகமும் செய்யாமல் நிறுவன சட்டம் 2013, பிரிவு 248 கீழ் முடக்கப்பட்டு உள்ளதாகவும், 651 நிறுவனங்கள் மொத்தமாக மூடப்பட்டு உள்ளது.

 Struck off என்றால் என்ன..?
 

Struck off என்றால் என்ன..?

நிறுவன சட்டம் 2013, பிரிவு 248 என்பது பதிவு செய்யப்பட்ட நிறுவனம் 2 வருடம் தொடர்ந்து எவ்விதமான வர்த்தகம், பரிமாற்றம் செய்யாமல் இருந்தால் Struck off எனப் பதிவு செய்யப்படும். அப்படி 2018 முதல் இந்தியாவில் முடங்கப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை 2,38,223.

 கார்பரேட் விவகாரத் துறை

கார்பரேட் விவகாரத் துறை

மேலும் 2021ஆம் நிதியாண்டில் முடக்கப்பட்ட 13000 நிறுவனங்களில் எவ்வளவு பெரிய நிறுவனம், சிறிய அல்லது குறு நிறுவனம் என்பது கணக்கிடவில்லை எனக் கார்பரேட் விவகாரத் துறை மாநில அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nearly 13,000 companies Struck off in FY12 without doing any business

Nearly 13,000 companies Struck off in FY12 without doing any business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X