டெல்லி: உங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கானது அல்ல.
ஒரு வேளை இதுவரை இன்னும் லிங்க் செய்யவில்லை எனில் இது கட்டாயம் லிங்க செய்து கொள்ளுங்கள். ஏன்னெனில் கொரோனா பரவலுக்கு முன்பு வரை அரசு இதனை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறி வந்தது.
ஆனால் கொரோனாவின் காரணமாக இந்த இணைப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. அரசே அறிவிப்பு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இதனை இணைத்துக் கொள்ளவது நல்ல விஷயம் தானே. சரி வாருங்கள் எப்படியெல்லாம் இணைக்கலாம் என பார்ப்போம்.
ஆதார் பான் கார்டு இணைப்பு.. மார்ச் 31, 2021 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு..!

மீண்டும் அவகாசம் கிடைக்குமா?
இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது ஆதார் பான் இணைப்புக்கு பல முறை கால அவகாசம் கொடுத்தது. ஏன் உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும். அதோடு 10,000 ரூபாய் அபாதாரமும் விதிக்கப்படும் என்றெல்லாம் கூறியது. ஆனால் இன்று வரையிலும் பலரும் இணைக்கவில்லை என்பதே உண்மை. ஏற்கனவே பல முறை போதிய அவகாசம் கொடுத்த நிலையில், மீண்டும் அவகாசம் கிடைக்குமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஆக விரைவில் இதனை இணைத்துக் கொள்வது நல்லது.

SMS மூலம் இணைக்கலாம்
ஆதார் எண் பான் எண் ஆகியவற்றை இணைக்க இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று எஸ்எம்எஸ் மூலம் இணைத்துக் கொள்ளலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் மூலமாக இணைக்கலாம்
http://incometaxindiafiling.gov.in./ என்ற வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்கலாம்.
1) முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துறையின் வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
2) அடுத்து வலைதளத்தில் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
3) அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.
4) இதனை அடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
5) இதன் பின்பு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

நேரிலும் சென்று ஆதாரை இணைக்கலாம்
உங்களால் ஆன்லைனிலோ அல்லது எஸ் எம் எஸ் மூலமாகவே இணைக்க முடியாவிட்டால், நீங்கள் நேரில் சென்றும் இணைக்கலாம். இதற்காக நீங்கள் சேவை மையத்திற்கு சென்று Annexure-I நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதாவது பான் அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கு கட்டணம் உண்டு.