சர்பிரைஸ் கொடுத்த நெஸ்டில் இந்தியா.. லாபம் சரிவுதான்.. முதலீட்டாளர்களுக்கு கொட்டி கொடுத்த நெஸ்டில்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான உணவு எது என்றால், அவர்களிடம் முதலில் வரும் பதில் மேகி என்ற சொல்லாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு குழந்தைகளை ஈர்த்த ஓரு உணவு மேகி தான்.

 

அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், லாபத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகரலாபம் 1.4% சரிந்து, 587 கோடி ரூபாயாக வீழ்ச்சிக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 595.3 கோடி ரூபாயாக கண்டிருந்தது கவனிக்கதக்கது. எனினும் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 20.7% அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 486.6 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது கவனிக்கதக்கது.

அடடே.. தங்கம் விலை குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தெறிக்க விட்ட வருவாய்

தெறிக்க விட்ட வருவாய்

இது நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, லாக்டவுன் போடப்பட்ட நிலையில் இதன் தாக்கம் பொருளாதாரத்தில் எதிரொலித்தது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் சரிவில் உள்ளன.

செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 10.1 சதவீதம் அதிகரித்து, 3,541.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,215.8 கோடி ரூபாயாக இருந்தது என மும்பை பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நெஸ்டில் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதலீடு

இந்தியாவில் முதலீடு

இதற்கிடையில் இந்தியாவில் தங்களது செயல்பாட்டினை மேம்படுத்தும் விதமாக, அடுத்த சில நான்கு ஆண்டுகளில் நெஸ்டில் 2,600 கோடி ரூபாயினை இந்தியாவில் முதலீடு செய்யும் என தெரிவித்துள்ளது. அதோடு அடுத்த மூன்று - நான்கு ஆண்டுகளில் ஏற்கனவே இருக்கும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் நெஸ்டில் திட்டமிட்டுள்ளது.

செம விற்பனை
 

செம விற்பனை

இதற்கிடையில் நெஸ்டில் இந்தியா அதன் நிகர விற்பனை 10.19% அதிகரித்து, 3,525.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,199.31 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு உள்நாட்டு விற்பனை 10.23% அதிகரித்து, 3,350.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,039.09 கோடி ரூபாயாக இருந்தது. அதோடு ஏற்றுமதியும் 9.41% அதிகரித்து 175.31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 160.22 கோடி ரூபாயாக இருந்தது.

இடைக்கால டிவிடெண்ட்

இடைக்கால டிவிடெண்ட்

இதற்கிடையில் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக இடைக்கால டிவிடெண்டினையும் அறிவித்துள்ளது. இது ஒரு பங்கிற்கு இடைக்கால டிவிடெண்டாக 135 ரூபாய் அறிவித்துள்ளது. இந்த இடைக்கால டிவெண்ட் தொகை நவம்பர் 20 முதல் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nestle india reported profit falls to RS.587 crore

Nestle india reported profit falls to RS.587 crore, also its announced dividend of Rs.135 per share
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X