புதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய வருமான வரித்துறை புதிதாக அறிமுகம் செய்துள்ள வருமான வரித் தளம் தாமதமாகத் துவங்கியது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது.

 

இன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு..? நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..! இன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு..? நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..!

இந்நிலையில் புதிய வருமான வரி தாக்கல் தளத்தின் பிரச்சனைகள் குறித்துச் சமுக வலைத்தளத்தில் கருத்துக்கள் வைரலாகி வரும் வேளையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் காரசாரமாக டிவீட் செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் அதிரடியாக டிவீட் ஒரு டிவீட் செய்துள்ளார், "அனைவரும் எதிர்பார்த்து இருந்த ஈ-பைலிங் போர்ட்டல் 2.0 நேற்று இரவு 10.45 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வருமான வரித் தளத்தில் பல குறைகள் மற்றும் குறைபாடுகளும் உள்ளது பார்க்க முடிகிறது"

இன்போசிஸ், நந்தன் நீலகேனி

இன்போசிஸ், நந்தன் நீலகேனி

புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனமும், நந்தன் நீலகேனியும் வருமான வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் சேவை தரத்தில் குறைபாடு ஏற்படுத்தாது என நம்புகிறேன். வரி செலுத்துவோருக்கு எளிய சேவை அளிப்பதே முதன்மையாக இருக்க வேண்டும் எனத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்.

நிதியமைச்சரின் ரீடிவீட்
 

நிதியமைச்சரின் ரீடிவீட்

இப்புதிய வருமான வரித் தளம் திறக்கவில்லை, லாக்இன் செய்ய முடியவில்லை எனவும், இப்புதிய இணையத் தளம் மிகவும் தாமதமாக இயங்குகிறது என்றும் பல குறைகள் சமூகவலைத்தளத்தில் கருத்துக்களாகப் பதிவிட்டு வருகின்றனர்.

இன்போசிஸ் பெயர் முதல் முறையாக

இன்போசிஸ் பெயர் முதல் முறையாக

இந்த டிவீட்-ஐ ரீடிவீட் செய்து தான் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். முதல் முறையாக நிதியமைச்சர் வருமான வரித் தளத்தை உருவாக்கியது இன்போசிஸ் எனத் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் டிவிட்டர் கணக்கையும் தனது டிவீட்-ல் டேக் செய்துள்ளார்.

இன்போசிஸ் பங்குகள்

இன்போசிஸ் பங்குகள்

இந்த டிவீட்-க்குப் பின் இன்போசிஸ் பங்குகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்போசிஸ் பங்குகள் தொடர்ந்து நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இன்போசிஸ் பங்குகள் 1.83 சதவீத வளர்ச்சியில் 1415.05 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நிதியமைச்சரின் டிவீட்-க்கு சந்தை செவிசாய்க்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New e-filing portal have glitches: FM Nirmala Sitharaman tags Infosys, Nandan Nilekani on twitter

New e-filing portal have glitches: FM Nirmala Sitharaman tags Infosys, Nandan Nilekani on twitter. ஹோப் Infosys, Nandan Nilekani will not let down our taxpayers in the quality of service being provided. Ease in compliance for the taxpayer should be our priority says FM Nirmala Sitharaman
Story first published: Tuesday, June 8, 2021, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X