ஜன. 1 முதல் பழைய 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்.. புதிய விதிமுறை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல எதிர்ப்புகள் மத்தியில் பாஸ்டேக் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், ஜனவரி 1 முதல் தற்போது இருக்கும் விதிமுறைகளைக் கீவ் பழைய வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு.

இதன் மூலம் புதிய வாகனங்களுடன் பழைய வாகனங்களையும் சேர்த்து அனைத்து 4 சக்கர வாகனங்களுக்குப் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கட்டணங்களை டிஜிட்டல் மற்றும் ஐடி சேவை மூலம் பேமெண்ட்களை மேம்படுத்துவதற்காகப் பாஸ்டேக் மூலம் பேமெண்ட்-ஐ அதிகரிக்க முடிவு செய்து மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

ஜனவரி 1, 2021 முதல் பழைய வாகனங்கள் அதாவது டிசம்பர் 1, 2017 முன் விற்பனை செய்யப்பட்ட M மற்றும் N பிரிவில் இருக்கும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் CMVR 1989 கீழ் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாஸ்டேக்

பாஸ்டேக்

மத்திய மோட்டா் வாகன விதிமுறை 1989 கீழ் டிசம்பர் 1, 2017க்குப் பின் விற்பனை செய்யப்பட்ட அனைத்து வானங்களுக்குப் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல பாஸ்டேக்-கள் கார் உற்பத்தியாளர்களுக்கும், டீலர்களுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பழைய வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

 

 தகுதி சான்றிதழ்

தகுதி சான்றிதழ்

மேலும் பாஸ்டேக் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே fitness certificate (FC) கொடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 1, 2019 முதல் அனைத்து நேஷனல் பர்மிட் வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

இதேபோல் பார்ம் 51 கீழ் வாகனங்களுக்கு 3ஆம் தரப்பு இன்சூரன்ஸ் பெற பாஸ்டேக் கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இந்தப் பார்ம் 51 மூலம் பாஸ்டேக் ஐடியை கைப்பற்ற முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தப் புதிய விதிமுறை ஏப்ரல் 1, 2021 முதல் அமலாக்கம் செய்யப்படுவதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

 

நோ கேஷ்

நோ கேஷ்

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மூலம் டோல் கேட்-ல் 90 சதவீத பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் பாஸ்டேக் வாயிலாகவே நடைபெறும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய டோல் கேட்-ல் பணமில்லா பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

மேலும் பாஸ்டேக் மக்கள் கையில் எளிதாகக் கிடைக்கப் பல வழிகளை உருவாக்கப்பட்டு உள்ளதால் அடுத்த 2 மாதத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாஸ்டேக் கையில்களில் கிடைக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Rule: fast tag mandatory for old four wheel vehicles from january 1, 2020

New Rule: fast tag mandatory for old four-wheel vehicles from January 1, 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X