கூகிள்-க்குப் போட்டியாகப் புதிய சர்ச்இன்ஜின்.. ஆப்பிள் அதிரடி திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெக் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு வித்திட்ட முதல் நிறுவனம் என்றால் மிகையில்லை GUI, ஸ்மார்ட்போன், டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர், கேரமரா தரம், பாதுகாப்பான பிரவுசர், அதி திறன் வாய்ந்த லேப்டாப், உயர் தர அனிமேஷன் தொழில்நுட்பம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

சமீபத்தில் உலகில் எந்த ஒரு நிறுவனமும் அடைந்திடாத 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடைந்து ஆப்பிள் சாதனை படைத்த நிலையில், தற்போது கூகிள் நிறுவனத்தின் ஆஸ்தான வர்த்தக அடித்தளமாக இருக்கும் சர்ச்இன்ஜின் வர்த்தகத்தில் போட்டிப் போட ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

இதனால் சர்ச்இன்ஜின் வர்த்தகத்தில் கூகிள் மற்றும் ஆப்பிள் இடையே புதிய போட்டி உருவாக உள்ளது.

ஜூன் 2020 காலாண்டு GDP மதிப்பீடுகள் வரலாறு காணாத சரிவைக் காணலாம்!

புதிய சர்ச்இன்ஜின்

புதிய சர்ச்இன்ஜின்

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் கடந்த சில மாதங்களாகவே கூகிளுக்குப் போட்டியாகவும், சில அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திலும் புதிய சர்ச்இன்ஜினை உருவாக்குப் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆப்பில் பல AI மற்றும் சர்ச் இன்ஜினியர்களுடன் பணியாற்றி வருகிறது.

புதிய ஓஎஸ்

புதிய ஓஎஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்தியேகமான இயங்குதளமான iOS 14 beta மற்றும் iPadOS 14 beta ஆகிய ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தில் தான் இப்புதிய சர்ச்இன்ஜினை, கூகிள் சேவையில் இருந்து பிரித்துத் தனியாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கூகிள் மற்றும் ஆப்பிள்
 

கூகிள் மற்றும் ஆப்பிள்

ஆப்பிள் வாடிக்கையாளர்கள், ஆப்பிள் தயாரிப்புகளான ஐபோன், ஐபேட், மேக் போன்றவற்றில் Safari பிரவுசர் பயன்படுத்தும் போது அதில் default-ஆகக் கூகிள் சர்ச்இன்ஜினில் தான் இயங்கும். இதற்காகக் கூகிள் நிறுவனம் ஆப்பிளுக்குப் பல வருடங்களாகப் பணம் செலுத்தி வருகிறது.

ஆனால் வாடிக்கையாளர்கள் நினைத்தாலோ அல்லது விரும்பினாலோ கூகிளை மாற்றிவிட்டுப் பிற சர்ச்இன்ஜினை செட் செய்துகொள்ளலாம்.

பிரச்சனை

பிரச்சனை

UK Competition and Markets Authority விதிமுறைகள் படி, இந்த DEFAULT செட்டிங் மூலம் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களைக் கூகிள் பயன்படுத்த நிர்பந்தம் செய்வதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கப் புதிய ஆப்பிள் கருவியை வாங்கும் போது வாடிக்கையாளர் முதல் முறையாக Safari பிரவுசர்-ஐ திறக்கும் போது சர்ச்இன்ஜின் தேர்வுகளை வாடிக்கையாளரே தேர்வு செய்துகொள்ளக் கூடி வசதியைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

புதிய

புதிய

கூகிள் சர்ச்இன்ஜினை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் இருப்பதால், இதன் மூலம் இழக்கும் வருமானத்தை ஈடு செய்யவும், புதிய வர்த்தகத்தைப் பெறவும் புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் திறன் கொண்டு ஒரு சர்ச்இன்ஜினை உருவாக்கும் பணியில் தற்போது ஆப்பிள் தீவிரமாக இறங்கியுள்ளது.

லாபம்

லாபம்

ஏற்கனவே ஆப்பிள் வாடிக்கையாளர், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் பாதுகாப்பு மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளதால், இப்புதிய ஆப்பிள் சர்ச்இன்ஜின்-க்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் கூகிள் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய பாதிப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New SearchEngine from Apple to take on Google: New game between Tech gaints

New SearchEngine from Apple to take on Google: New game between Tech giants
Story first published: Monday, August 31, 2020, 16:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X