அமெரிக்காவில் புதிய மசோதா.. ஹெச்1பி விசா-வில் கடும் கட்டுப்பாடுகள்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெக் ஊழியர்களின் பெரும் கனவு என்றால் அது ஹெச்1பி விசா உடன் அமெரிக்காவில் வேலை என்பது தான், டிரம்ப் ஆட்சியில் இருந்த போது ஹெச்1பி விசாவில் பல கட்டுப்பாடுகளை விதித்த காரணத்தால் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பல இழந்தனர். இந்தச் சூழ்நிலையில், பைடன் ஆட்சியில் முதல் 8 மாதத்திற்குள் டிராம்ப் விதித்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவில் ஹெச்1பி விசா திட்டத்தின் கீழ் கடுமையான நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 அமெரிக்கன் டெக் வொர்க்போர்ஸ்

அமெரிக்கன் டெக் வொர்க்போர்ஸ்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்கன் டெக் வொர்க்போர்ஸ் விதி 2021 தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள மசோதாவில் ஆப்ஷனல் பிராடிக்கல் டிரைனிங் திட்டத்தை மொத்தமாகத் தடை செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தைப் பெரிய நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி அதிகளவில் பலன் பெறுவதாக் கூறப்பட்டு உள்ளது.

 OPT திட்டம்

OPT திட்டம்

Optional Pratical Training (OPT) திட்டத்தின் மூலம் பெரிய டெக் நிறுவனங்கள் வரிச் சலுகை பெறுவது மட்டும் அல்லாமல், குறைந்த சம்பளத்தில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் சலுகையும் பெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பச்சு உள்ளது, விரைவில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

வருமான அளவீடு
 

வருமான அளவீடு

இதேபோல் ஹெச்1பி விசா வழங்குவதற்கு ஆண்டு வருமான அளவீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும், மேலும் இந்த வருமானத்தை நிர்ணயம் செய்யத் தத்தம் பதவியில் இருக்கும் அமெரிக்கரின் அதிகப்படியான சம்பளத்தைக் கருத்தில் கொண்டு அளவீட்டை முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 1 வருடம் மட்டுமே

1 வருடம் மட்டுமே

மேலும் ஹெச்1பி விசா காலத்தைத் தற்போது இருக்கும் 3 வருடத்தை 1 வருடமாகக் குறைக்க வேண்டும் என்றும் இந்த மசோதா மூலம் ஜிம் பேங்க்ஸ் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

 ஜிம் பேங்க்ஸ்

ஜிம் பேங்க்ஸ்

மேலும் இந்த மசோதாவை குடியரசு கட்சியின் ஆய்வு அமைப்பின் தலைவர் ஜிம் பேங்க்ஸ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். முதலில் இந்த மசோதாவை விவாதத்திற்காக எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டும் அதன் பின்பு ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுச் சட்டமாக உருவாக்கப்பட்டு அமலாக்கம் செய்யப்படும்.

 வரிச் சலுகை

வரிச் சலுகை

ஜிம் பேங்க்ஸ் அமெரிக்காவில் பெரிய நிறுவனங்கள் வரிச் சலுகை முதல் அதிகளவில் ஆதாயம் பெற்றாலும், நாட்டுப்பற்று இல்லாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல் அமெரிக்காவில் பெரு நிறுவனங்கள் முக்கியமான வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New US bill for H-1B visa with stringent norms, end of OPT program, Wage floor, validity of H1B Visa

New US bill for H-1B visa with stringent norms, end of OPT program, Wage floor, validity of H1B Visa அமெரிக்காவில் புதிய மசோதா.. ஹெச்1பி விசா-வில் கடும் கட்டுப்பாடுகள்...!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X