வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்.. அடுத்த 10 நாளில் வரப்போகும் தொகை எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அடுத்த 10 நாட்களில், வங்கிகள் ஆறு மாத கடன் தவணை தள்ளிவைப்பு சலுகை பெற்ற கடனாளர்களுக்கு பணத்தை வரவு வைக்க தொடங்க உள்ளன. கடந்த ஆறு மாத காலக்கட்டத்தில் வசூலித்த வட்டி வட்டியை பணத்தை தரப்போகின்றன. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு ரூ .5,000 கோடிக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடன் தள்ளிவைப்பு சலுகை பெற்றவர்கள், கடன் தள்ளிவைப்பு சலுகை பெறாதவர்களுக்கு கிடைக்க போகும் சலுகைகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

கடன் தவணை தள்ளிவைப்பு: மத்திய அரசால் 6 மாதங்களுக்கு கடன் தவணை தள்ளிவைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செயல்படுத்தப்பட்டது. செப்டம்பர் முதல் வங்கிகள் ஈ.எம்.ஐ. வசூலிக்க தொடங்கின.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

இஎம்ஐ நீட்டிப்பு

இஎம்ஐ நீட்டிப்பு

கடனின் நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. அதாவது கட்டாமல் தள்ளிவைக்கப்பட்ட 6 மாத காலத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு திருப்பிச் செலுத்தும் அட்டவணை மறுஆக்கம் செய்யப்பட்டது. அதாவது கடன் முடிந்த பின்னரும் அடுத்த ஆறு மாதத்திற்கு கடன் தவணைகள் நீட்டிக்கப்பட்டுளளது.

மாத தவணை

மாத தவணை

இதன்படி மாத தவணையை நீட்டித்தவர்களுக்கு வட்டிக்கு வட்டி தொகை போடப்பட்டதால் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய வட்டி கடன் தொகை அதிகரித்தது. ஒவ்வொரு வரும் குறிப்பிட்ட அளவு தொகை அதிகமாக செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர்.

வட்டி தள்ளுபடி
 

வட்டி தள்ளுபடி

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போது வட்டிக்கு வடடி தொகை திரும்ப அளிக்கப்பட உள்ளது. இதேபோல் கடனை திரும்ப செலுத்தியவர்களுக்கும் அதே அளவு தொகை அளிக்கப்பட உள்ளது, மற்றபடி தள்ளிவைப்பு செய்யப்பட்ட காலத்திற்கு வட்டி கட்டாயம் வசூலிக்கப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடன் தொகை அளவு

கடன் தொகை அளவு

வட்டிக்கு வட்டி தள்ளுபடியால் பெரிய லாபம் இல்லை என்றாலும் ஓரளவு நன்மை உண்டு. இதன்படி யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இப்போது உதாரணமாக பார்ப்போம். உதாரணமாக 7.5 சதவீத வட்டியில் நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அதற்கு 6 மாத காலத்திற்கு வசூலிக்கப்பட்ட வட்டி வட்டி தொகை எவ்வவு திரும்ப கிடைக்கும் என்பதை பாருங்கள். 30 லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு ரூ.1772 திரும்ப கிடைக்கும். 50 லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு ரூ.2995 கிடைக்கும். 75லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு ரூ.4135 கிடைக்கும்.

எப்போது கிடைக்கும்

எப்போது கிடைக்கும்

2 கோடி வரையிலான கடன் வாங்கிய மக்களுக்கு இந்த நிவாரண தொகைய அரசு தான் அளிக்கப்போகிறது. வட்டிக்கு வட்டிக்கான தொகையை அரசு வங்கிகளுக்கு அளிக்க போகிறது. அந்த தொகை வங்கிகள் அடுத்த 10 நாளில் கடன் வாங்குபவர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கும். 6,500 கோடி ரூபாய் அரசுக்கு மொத்தம் செலவு ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடன் அளவு என்ன

கடன் அளவு என்ன

யாருக்கு எல்லாம் இந்த தொகை கிடைக்கும். அனைத்து கடன் வாங்கியபவர்ளுக்கும் கிடைக்கும். கடன் தள்ளிவைப்பு காலத்தை பயன்படுத்தியவர்கள், பயன்படுத்தாதவர்களுக்கும் பலன் கிடைக்கும், அரசின் அறிவிப்பின் படி, பிப்ரவரி 29 நிலவரப்படி ரூ .2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

தனிநபர் கடன்கள்

தனிநபர் கடன்கள்

என்னென்ன கடன்கள்: எம்எஸ்எம்இ கடன்கள் (சிறுகுறு நடுத்தர தொழில் கடன்), கல்வி கடன், வீட்டுக்கடன், நுகர்வோர் பொருட்கள் கடன், தனிநபர் கடன், கிரிடிட் கார்டு கடன்கள், வாகன கடன்கள், நுகர்வு கடன்கள் ஆகிய கடன்கள் வாங்கியவர்களுக்கு சலுகை உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

next 10 days, banks will start crediting money to borrowers who had availed loan moratorium

Over the next 10 days, banks will start crediting money to borrowers who had availed the six-month Covid-19 loan moratorium, compensating them for the interest-on-interest levied during the period. The eventual cost will be borne by the government and expected to cost over Rs 5,000 crore.
Story first published: Monday, October 26, 2020, 13:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X